எம். சி. சித்திலெப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம். சி. சித்திலெப்பை மரைக்காயர் (ஜூன் 11, 1838 - பெப்ரவரி 5, 1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலான அஸன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதியவர். இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லீம் நேசன் என்ற இதழை நடத்தியவர்.