இசைஞானியார் நாயனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.
திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். ஆளுடைய நம்பியைப் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ?
இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்
[தொகு] உசாத்துணைகள்
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்