ஆதாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆதாம் அபிரகாமிய சமயங்களின் படி எலியோமால் படைக்கப்பட்ட முதல் மனிதனாகும். ஆதாம் கிறிஸ்தவ இஸ்லாம் பஹாய் யூத மதங்களில் இறைவாக்கினராகக் கருதப்படுகிறார்.
[தொகு] யூத கிறிஸ்தவ நோக்கு
ஆதாமின் படைப்புப் பற்றி டோறா மற்றும் விவிலியத்தில் உள்ளடக்கப்படுள்ள நூலான ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆரம்ப அதிகாரங்களில் உள்ளது.
அதன் படி ஆதாம் எலியோமால் அவரது சாயலாகப் படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்தார். ஆதாம் உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பெயரிடுமாறு எலியோமால் பணிக்கப்பட்டார். பின்பு கடவுள் அவனது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தார். ஆதாம் எல்லா மனிதருக்கும் தாயானவள் என் பொருள்படும்படி அவளுக்கு ஏவாள் என பெயரிட்டான். அவர்கள் கடவுளின் சொல்லைக் கேளாமல் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் புசித்தபடியால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள்.
ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறியவுடன் ஆதாம் வேலை செய்து ஏவாளுக்கு உணவு வழங்க வேண்டியதாயிற்று. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயின் ஆபேல் சேத் என்ற மகன்கள் பிறந்ததாக ஆதியாகமம் கூறுகிறது. மேலும் இவர்களது பென் குழந்தைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது, தனது சகோதரனான சேத்தை மணமுடித்த அசுரா, தனது சகோதரனான ஆபேலை மணமுடித்த அவண் என்பவராகும். ஆதியாகமத்தில் ஆதாம் மேலும் பல குழந்தைகளை பெற்றதாக கூறுகின்றது. ஆனால் எத்தனை குழந்தைகள் என்பது பற்றி ஒர் குறிப்பும் காணப்படுவதில்லை.
ஆதாம் 930 வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாக ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
[தொகு] இஸ்லாம் நோக்கு
திருக்குர்ஆனில் ஆதாம் முதல் மனிதனாகவும் முதல் தீர்க்கதரிசியாகவும் அவ்வாவின் (ஏவாளின் அரபு வடிவம்) கணவன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.