ஆட்டோ ரிக்சா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆட்டோ (Auto) என்றழைக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா (auto rickshaw) வாடகைக்கு விடப்படும் ஒரு வாகனமாகும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆட்டோ திகழ்கிறது. மனித விசையில் இயங்கும் பாரம்பரியமான ரிக்ஷா வண்டியின் மோட்டார் பொருத்தப்பட்ட வடிவம் தான் ஆட்டோ. தாய்லாந்தில் பயன்படுத்தப்படும் டுக்-டுக்கும் இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் பஜாஜும் ஆட்டோவை ஒத்தவை.