அங்கிலிக்கன் திருச்சபை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அங்கிலிக்க ஒன்றியம் என்பது உலகம் முழுவதுமுள்ள அங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும்.அதாவது இங்கிலாந்து திருச்சபையுடன் முக்கியமாக அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஒரே தலைவரைக் கொண்ட ஒரு "அங்கிலிக்கன் திருச்சபை" ஒன்று கிடையாது மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன. 77 மில்லியனுக்குமதிகமான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும்.