வீட்டுக் காகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
tr>
அறிவியல் வகைபிரிப்பு | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
</ | ||||||||||||||
|
||||||||||||||
இருபடிப் பெயர் | ||||||||||||||
கோர்வஸ் ஸ்பிளெண்டன்ஸ் (Corvus splendens) |
வீட்டுக் காகம் (கோர்வஸ் ஸ்பிளெண்டன்ஸ்) அளவைப் பொறுத்து, Jackdaw மற்றும் கரியன் காகம் (Carrion Crow) என்னும் இரு வகைக் காகங்களுக்கு இடைப்பட்டதாக உள்ளது. எனினும், மேற்படி இரண்டு வகைகளிலும் பார்க்க மெலிந்த உடலமைப்பைக் கொண்டுள்ளது. நெற்றி, உச்சி, தொண்டைப் பகுதி, மேல் மார்பு என்பன மினுக்கமான கடும் கரு நிறத்தைக் கொண்டுள்ள அதேவேளை, கழுத்து மற்றும் மார்பு சாம்பல் கலந்த மண்ணிறமானது. சிறகுகளும், வாலும், கால்களும் கருநிறமானவை.
இவற்றின் பல்வேறு உடற் பகுதிகளின் நிறங்களின் கடுமைத்தன்மையும், சொண்டின் தடிப்பும் வேறுபாடாக அமைந்த, பல பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட காகங்கள் காணப்படுகின்றன.