விருமாண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விருமாண்டி | |
இயக்குனர் | கமலஹாசன் |
---|---|
தயாரிப்பாளர் | சந்திர ஹாசன் |
நடிப்பு | கமலஹாசன் அபிராமி நாசர் பசுபதி நெப்போலியன் (நடிகர்) ரோகினி காந்திமரி பிரமிட் நடராஜன் |
இசையமைப்பு | இளையராஜா |
ஒளிப்பதிவு | கேசவ் பிரகாஷ் |
வெளியீடு | 2004 |
கால நீளம் | 165 நிமிடம் |
மொழி | தமிழ் |
விருமாண்டி கிராமிய பாணியில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமலஹாசன், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரப்படம் கிழக்கு கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
விருமாண்டி (கமலஹாசன்) மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலத் தேவர் பசுபதி மற்றும் நல்லம்ம நாயக்கர் நெப்போலியன் ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர். அவர்களுள் கொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார். இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப் பேட்டியாளரிடம் கூறுகிறார். இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன.