வின்டோஸ் என்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|
நிறுவனம்/விருத்தியாளர்: | மைக்ரோசாப்ட் |
Source model: | மூடிய மூலம் / பகிரப்பட்ட மூலம் |
ஸ்திரமான வெளியீடு : | வார்ப்புரு:Latest stable release/வின்டோஸ் என்டி [+/-] |
முன்னோட்டம்: | வின்டோஸ் சேவர் 2008 Release Candidate 0 NT 6.0.6001.16648 (செப்டம்பர் 2007) [+/-] |
Kernel type: | Hybrid kernel |
Default user interface: | வரைகலைப் பயனர் இடைமுகம் |
License: | மைக்ரோசாப்ட் EULA |
Working state: | தற்போதைய |
வின்டோஸ் புதிய தொழில் நுட்பம் (Windows New Technology) எனப்பொருள்படும் வின்டோஸ் என்டி மைக்ரோசாப்டினால் 1993 ஜூலையில் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்க விண்டோஸ் எண்டி ஓர் விண்டோஸ் இயங்குதளக் குடும்பமாகும். விண்டோஸ் எண்டியே மைக்ரோசாப்டின் முதலாவதும் முழுமையானதும் ஆன 32 பிட் இயங்குதளமாகும். விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் சேவர் 2008 மற்றும் விண்டோஸ் ஹோம் சேவர் ஆகியவை விண்டோஸ் எண்டி குடும்பத்தைச் சார்ந்ததெனினும் அவை விண்டோஸ் எண்டி என சந்தைப்படுத்தப்படுவதில்லை.
[தொகு] முக்கிய வசதிகள்
இவ்வியங்குதள உருவாக்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பல்வேறுபட்ட வன்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்களை ஆதரிப்பதாகும். விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் இன்டெல், i386, ஆல்பா, பவர்பீசி போன்ற புரோசர்களை ஆதரிக்கின்றது.
விண்டோஸ் எண்டி 3.1 ஏ முதலாவது 32பிட் புரோசர்களை ஆதரிக்கும் ஓர் இயங்குதளமாகும். இதனுடன் இயங்கிய விண்டோஸ் 3.1 துண்டாமாக்கப்பட்ட முறையில் நினைவகங்கள் அணுகியது.
என்டிஎப்எஸ் (NTFS) என்றழைக்கப்படும் பாதுகாப்பான கோப்புமுறையானது விண்டோஸ் எண்டியிற்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ் எண்டியானது டாஸ் இயங்குதளத்திலான 16 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் விண்டோஸ் 2000 இலிருந்தான பதிப்புக்கள் 32 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் சேமித்துக் கொள்ளும். குறிப்பு விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் FAT 16 இல் 4ஜிகாபைட் வரையிலான அளவை ஆதரிக்கும் எனினும் விண்டோஸ் 98 இதனை ஆதரிக்காது இவ்வாறான கட்டத்தில் விண்டோஸ் எண்டி ஐ எடுத்துவிட்டு விண்டோஸ் 98 போடுவதானாலால் முதலில் ஏதாவது ஒரு விண்டோஸ் எண்டி இயங்குதளமூடாக நிறுவலை ஆரம்பிப்பது போல் வந்துவிட்டு ஹாட்டிஸ்கில் உள்ள பாட்டிசனை அழித்தல் வேண்டும் இல்லாவிடின் விண்டோஸ் 98 நிறுவவியலாது. விண்டோஸ் எண்டி, 2000, எக்ஸ்பி ஆகியன பாட் கோப்புமுறையை ஆதரித்து முற்காப்பின்றி வேகமாக இயங்கினாலும் இவ்வசதியானது விண்டோஸ் விஸ்டாவில் இல்லை.
[தொகு] வெளியீடுகள்
பதிப்பு | வர்தகப் பெயர் | பதிப்பு | வெளியீட்டுத் திகதி | RTM Build |
---|---|---|---|---|
எண்டி 3.1 | வின்டோஸ் என்டி 3.1 | வேர்க்ஸ் ஸ்டேசன் (விண்டோஸ் என்டி என்று பொதுவாக அறியப்படுவது), அட்வான்ஸ் சேவர் | 27 ஜூலை 1993 | 528 |
என்டி 3.5 | விண்டோஸ் என்டி 3.5 | Wவேர்க்ஸ் ஸ்டேசன், சேவர் | 21 செப்டம்பர் 1994 | 807 |
என்டி 3.51 | விண்டோஸ் என்டி 3.51 | வேர்க்ஸ் ஸ்டேசன், சேவர் | 30 மே 1995 | 1057 |
எண்டி 4.0 | விண்டோஸ் என்டி 4.0 | வேர்க்ஸ் ஸ்டேசன், சேவர், சேவர் எண்டபிறைஸ் எடிசன், சேவர் எண்டபிறைஸ் எடிசன், டேமினல் சேவர், எம்பெடட் | 29 ஜூலை 1996 | 1381 |
என்டி 5.0 | வின்டோஸ் 2000 | புறொபஷனல், சேவர், அட்வான்ஸ் சேவர், டேட்டா செண்டர் சேவர் | 17 பெப்ரவரி 2000 | 2195 |
என்டி 5.1 | வின்டோஸ் எக்ஸ்பி | Home, Professional, 64-bit (original), Media Center (original, 2003, 2004 & 2005), Tablet PC (original and 2005), Starter, Embedded, Home N, Professional N | 25 அக்டோபர் 2001 | 2600 |
என்டி 5.1 | விண்டோஸ் பண்டமெண்டல்ஸ் பொ லெகஸி பிஸிஸ் | N/A | July 8 2006 | 2600 |
என்டி 5.2 | வின்டோஸ் சேவர் 2003 | ஸ்டாண்டட் எண்டபிறைஸ், டேட்டா செண்டர், வெப், ஸ்ரோறேஜ், சிமோல் பிஸ்னஸ் சேவர், கம்பியூட்டர் கிளஸ்டர் | 24 ஏப்ரல் 2003 | 3790 |
என்டி 5.2 | விண்டோஸ் எக்ஸ்பி (5.2) | 64-பிட் 2003, பிறொபஷனல் x64 | A25 ஏப்ரல் 2005 | 3790 |
என்டி 5.2 | வின்டோஸ் ஹோம் சேவர் | N/A | 16 ஜூலை, 2007 | 3790 |
என்டி 6.0 | வின்டோஸ் விஸ்டா | Starter, Home Basic, Home Premium, Business, Enterprise, Ultimate, Home Basic N, Business N | Business: November 30, 2006 Consumer: January 30, 2007 |
6000 |
என்டி 6.0 | வின்டோஸ் சேவர் 2008 | Standard, Enterprise, Datacenter, Web, Storage, Small Business Server | 27 பெப்ரவரி, 2008 (எதிர்பார்க்கப்படுகின்றது) | 6001 |
என்டி 7.0 | வின்டோஸ் 7 (ஆரம்பத்தில் பிளாக்கொம்ப் என்றும் பின்னர் வியன்னா என்றும் அழைக்கப்படுவது) | அறியப்படவில்லை | 2010 | அறியப்படவில்லை |