விநாடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விநாடி அல்லது நொடி என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் புழக்கத்திலிருந்துவரும் மரபுவழிக் கால அலகுகளில் ஒன்றாகும். 60 விநாடிகள் ஒரு நாடி ஆகும். 60 நாடிகள் ஒரு நாளுக்குச் சமம். தற்காலத்தில் இக் கால அலகுகள் சோதிடம், இந்து சமயம் தொடர்பான காலக்கணிப்பு என்பவற்றுக்கு மட்டுமே பயன்படுகின்றது. பிற தேவைகளுக்கு மணி, நிமிடம், செக்கன் முதலிய அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும்.