விண்டோஸ் 2.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0 | |
விருத்தியாளர் | |
மைக்ரோசாப்ட் | |
வெளியீட்டுத் தகவல் | |
வெளியீட்டுத் திகதி: | நவம்பர் 1987 info |
தற்போதைய பதிப்பு: | 2.03 (நவம்பர் 1987) info |
மூலநிரல் : | மூடிய மூலம் |
அனுமதி: | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
Kernel type: | N/A |
Support status | |
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது. |
விண்டோஸ் 2.0 விண்டோஸ் 1.0 இன் வழிவந்த வரைகலைச் சூழலுடன் கூடிய 16 பிட் இயங்குதளம் ஆகும்.
[தொகு] புதிய வசதிகள்
பக்கத்தில் பக்கத்தில் மாத்திரமே வைத்திருந்த விண்டோஸைப் போன்றல்லாது ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கும் விண்டோஸ்களை இந்த இயங்குதளம் அறிமுகம் செய்தது. விசைப்பலகையூடான குறுக்கு வழிகளையும் அறிமுகம் செய்தது. விண்டோஸ் 1.0 இல் பாவித்த தொழில் நுட்பச் சொற்களான "ஐகானைஸ்", "சூம்" போன்ற சொற்களை விடுத்து "சிறிதாக்கு" "பெரிதாக்கு" பொன்ற சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
[தொகு] பிரயோகங்களின் ஆதரவு
முதன் முறையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2.0 இல் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் இயங்கும் வண்ணம் செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட் அல்லாதா மென்பொருள் விருத்தியாளர்கள் இந்தப் பதிப்பில் ஆதரவைக் கூட்டிக் கொண்டனர். சிலர் விண்டோஸை முழுமையாக வாங்கிக் கொள்ளாத பயனர்களுக்காக விண்டோஸ் இயங்குநிலை மென்பொருட்களையும் உள்ளடக்கியிருந்தனர். எனினும் பெரும்பாலான மென்பொருள் விருத்தியாளர்கள் விண்டோஸ் இயங்குதளத்தினைப் பாவிப்பவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்ததினால் டாஸ் இயங்குதளத்திற்கென்றே மென்பொருளை உருவாக்கினர்.