ரிஷபப்பிரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரிஷபப்பிரியா 62வது மேளகர்த்தா இராகம்.
ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க3 ரி2 ஸ |
[தொகு] இதர அம்சங்கள்
"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம். 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரதிப்பிரியா என்று பெயர்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : மதிமதக்கிஞ்சு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : முத்துத் தாண்டவர்.
- கிருதி : கன நய தேசிக : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : மலையெனத்தலை : ஆதி : சுத்தானந்த பாரதியார்.