ராமதுரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுப்ரமணியம் ராமதுரை, டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) ஆவார்.
இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 85, 000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும், 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 3 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.