கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேச கல்யாணி 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம்.
[தொகு] இதர அம்சங்கள்
- "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம். 29வது மேளமாகிய சங்கராபரணத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, நிஷாத மூர்ச்சனைகள் முறையே ஹரிகாம்போஜி (28), நடபைரவி (20), சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
- பண்டைய மேளமாகிய ஷட்ஜக் கிராமத்தின் காந்தார மூர்ச்சனை கல்யாணி.
- ஸ்புரித, திரிபுச்ச கமகங்கள் இவ்விராகத்தின் சாயலைக் காட்டும்.
- இராகம், தானம், பல்லவிக்கு ஏற்ற இராகம்.
- எல்லா விதமான இசை வகைகளும் இவ்விராகத்தில் இயற்றப்பட்டுள்ளன.
- ஹங்கேரி நாட்டு இசையிலும் இந்த இராகம் காணப்படுகிறது.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : ஹிமாத்ரி ஸூதே - ரூபகம் - சியாமா சாஸ்திரிகள்.
- கிருதி : பதம் தருவாய் - ஆதி - டைகர் வரதாச்சாரியார்.
- வர்ணம்: வனஜாக்ஷிரோ - ஆதி - ....
- கிருதி : நிதிசால சுகமா - மிஸ்ர சாபு - தியாகராஜர்.
- கிருதி : ஆடினதெப்படியோ - ஆதி - முத்துத் தாண்டவர்.
- தரு : வாசுதேவயனி - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : சிதம்பரம் என - ஆதி - பாபநாசம் சிவன்
- பதம் : பாரெங்கும் - ஆதி - கனம் கிருஷ்ணய்யர்
- கிருதி : தேவி மீனாக்ஷி முதம் - ரூபகம் - தச்சூர் சிங்காரச்சாரியார்
- கிருதி : ஸரஸ்வதி நன்னெபுடு - ரூபகம் - திருவெற்றியூர் தியாகய்யர்
[தொகு] மேசகல்யாணியின் ஜன்யராகங்கள்
- சாரங்கா
- அமிர்தவர்ஷிணி
- யமுனாகல்யாணி
- ஹமீர்கல்யாணி
- ரசமஞ்சரி
- மோகனகல்யானி
- குந்தலசிறீகண்டி
- குந்தலகுசுமாவளி
- சதுரங்கணி
- கௌரிநிஷாதம்
- சுநாதவினோதினி
- மைத்திரபாவனி
- கௌமோத
- கல்யாணதாஹினி
- வந்தனதாரினி
- சுப்ரவர்ணி
- ஸ்மரரஸாளி
- கமலோத்ரம்
[தொகு] மேசகல்யாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- சிந்தனை செய் மனமே :- அம்பிகாபதி
- வந்தாள் மகாலக்ஷ்மியே :- நானும் ஒரு தொழிலாளி
- அந்தமான் உந்தன் சொந்தமான்
- மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
- மன்னவன் வந்தானடி தோழி
- அம்மா என்றழைக்காத உயிர் :- மன்னன்
- நிற்பதுவே நடப்பதுவே :- பாரதி