முத்து உவமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்து உவமை, இயேசு விண்ணரசின் பெருமதியையும் அதை எப்படி அடைய முயற்சிக்க வேண்டு என்பதையும் விளக்குவதற்காக கூறிய உவமான கதையாகும். இது மத்தேயு 13:45-46 இல் கூறப்பட்டுள்ளது. இரண்டு வசனம் மட்டுமே கொண்ட சிறிய உவமையாகும்.
பொருளடக்கம் |
[தொகு] உவமை
விவிலியத்தில் முத்து உவமை இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.
[தொகு] பொருள்
இதில் முத்து விண்ணரசை குறிக்கிறது. வியாபாரி தனது சொத்தனைத்தையும் விற்று முத்தை விலைக்கு வாங்குகிறான். அனால் முத்து அவன் வசம் வந்துவிட்ட படியால் அவன் முதல் இருந்ததைவிட செல்வந்தனாகிறான். இதில் கூறப்பட்டுள்ள உட்கருத்து யாதெனில் கிறிஸ்தவர்கள் இவ்வுலக சொத்துக்களை இழந்தாவது அல்லது செலவளித்தாவது மிகப்பெருமதியான விண்ணரசை தேடிக்கொள்ள வேண்டும் என்பதே. அழிந்து போகும் இவ்வுலக சொத்துக்களை பயன்படுத்தி அழியாத விண்ணரசை தேடுபவன் புத்திமான் என்பது கருத்தாகும்.