முதல் மரியாதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முதல் மரியாதை | |
இயக்குனர் | பாரதிராஜா |
---|---|
தயாரிப்பாளர் | பாரதிராஜா |
கதை | பாரதிராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் ராதா சத்யராஜ் வடிவுக்கரசி |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | 1985 |
கால நீளம் | 160 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
IMDb profile |
முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மலைச்சாமியை (சிவாஜி கணேசன்) தனது மனைவியை விடுத்து வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வதாக நம்பும் ஊர் மக்கள் அக்கூற்றின் உண்மையின் ஆழத்தினை ஆராயாது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.குயில் (ராதா)மலைச்சாமி வாழும் ஊருக்கு புதிதாக வந்து குடிகொள்கின்றார்,அச்சமயம் அவரைச் சந்திக்கும் மலைச்சாமி வீட்டில் தான் புதிதாக திருமணமான மனைவியின் கடும்போக்காலே குயிலை அவர் விரும்புவதாக ஊரார் பேசிக்கொள்கின்றனர் ஆனால் அவர் மனைவியோ தீய குணம் படைத்தவெரென்ற உண்மையினை மலைச்சாமி மட்டுமே அறிந்தும் இருந்தார்.ஆனாலும் அச்செய்தியை யாரிடமும் சொல்லாத வண்ணமும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது காதலின் நடுவினிலே வேறொரு காதல் ஜோடிக்குத் திருமணம் செய்து வைக்கும் மலைச்சாமி பின்னர் ஆற்றங்கரையில் செல்லும் பொழுது திருடன் ஒருவனால் மலைச்சாமி திருமணம் நடத்திவைத்த பெண்மணி கொல்லப்படவே காதலன் மனம் நொந்துகொள்கின்றான்.இதன்பின்னர் அத்திருடன் மலைச்சாமியின் உறவினரே என்பதனைத் தெரிந்துகொண்ட சமயம் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கைதியாக்கப்படுகின்றார் குயில்.இதன் பின்னர் பிரியும் மலைச்சாமியும் குயிலும் சந்திக்கின்றனரா என்பதே திரைக்கதை முடிவு.
[தொகு] விருதுகள்
1986 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து
- வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம் - முதல் மரியாதை - பாரதிராஜா