See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மாவிய எத்தனால் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மாவிய எத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மாவிய எத்தனால் (cellulosic ethanol) என்பது மரம், புல், உணவுக்காகா செடிகள் முதலானவற்றில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு உயிரி எரிபொருள் ஆகும். இது லிக்னோசெல்லுலோசு என்னும் மாவிய வகையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. லிக்னோசெல்லுலோசு என்பது பெரும்பாலும் மாவியம் (செல்லுலோசு), அரை மாவியம் (ஹெமி செல்லுலோசு), மற்றும் லிக்னின் இவற்றால் ஆனது. தாவரங்களின் நிறையில் (திணிவில்) அதிக அளவில் அமைந்திருக்கும் கட்டமைப்புப் பொருள் லிக்னோசெல்லுலோசு தான்.

சோளத் தட்டு, கோரைப் புல்(?) (switch grass), மரத்துண்டுகள் முதலானவை மாவிய எத்தனால் எரிபொருளைத் தயாரிக்கச் சிறந்தவை ஆகும். மாவிய எத்தனாலும் சோளப்பயிர், சர்க்கரை முதலானவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சாதாரண எத்தனாலும் வேதியியல் முறைப்படி அச்சாக ஒன்றே என்றாலும், லிக்னோசெல்லுலோசு என்னும் மாவிய எத்தனாலின் ஆரம்பப் பொருள் இயற்கையில் அளவற்றுக் கிடைப்பது சிறப்பானதும் வசதியானதும் ஆகும். ஆனால், மாவியத்தில் இருந்து சர்க்கரை மூலக்கூறைப் பிரித்து, அவற்றை நொதித்து எத்தனால் தயாரிக்கும் நுண்ணுயிரிகளுக்குக் கிடைக்கும் வண்ணம் செய்யச் சற்று அதிகச் செலுத்தங்கள் தேவையாய் இருக்கும்.

அதிக அளவிலான மாவியத்தைக் கொண்டிருப்பதால், எத்தனால் தயாரிக்கக் கோரைப் புல்லின் மீது இற்றைக் காலத்தில் அதிகக் கவனம் திரும்பியுள்ளது. மாவிய எத்தனாலின் முக்கிய பலன் என்னவென்றால், வழக்கமான கன்னெய் போன்ற எரிபொருட்களை விட பசுங்குடில் வளிம வெளியேற்றத்தைச் சுமார் 85% குறைக்கிறது. இதனை அமெரிக்க அரசாங்கத்தின் ஆற்றலியல் துறையின் ஆய்வில் ஆர்கான் தேசிய சோதனையகம்[1] வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஆனால் இயற்கை எரிவளி போன்றவற்றை அதிகம் பயன்படுத்தித் தயாரிக்கும் சாதாரண எத்தனால் பசுங்குடில் வளிம வெளியேற்றத்தைக் குறைப்பதாகவே தெரியவில்லை.[2]

நோபல் பரிசு பெற்ற பால் கருட்சன் என்பவர் சோளம், ஆமணக்கு, கரும்பு முதலானவற்றில் இருந்து பெறப்படும் எத்தனால் மொத்தத்தில் புவி வெப்ப ஏற்றத்தைக் குறைக்காமல் அதிகப் படுத்துவதற்குச் சிறிய விளைவை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளார்.[3]

[தொகு] உசாத்துணைகள்

  1. [1]
  2. (2007)Clean cars, cool fuels 5 (2).
  3. Crutzen, P.J., A.R. Mosier, K.A. Smith, and W. Winiwarter. “Nitrous oxide release from agro-biofuel production negates global warming reduction by replacing fossil fuels” Atmospheric Chemistry and Physics. Disucss., 7 11191–11205, 2007.
ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -