பேச்சு:மலையாளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தக்கட்டுரை மலையாள விக்கிபீடியாவிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு :-) மொழிபெயர்க்கப்ப்ட்டது. எனக்கு தெரிந்த தமிழைக்கொண்டும்,செந்தமிழ் அகராதி, மலையாள அகராதி, சமஸ்கிருத அகராதி முதலியவற்றின் உதவிக்கொண்டே மொழிப்பெயர்த்தேன். எனவே மொழிப்பெயர்ப்பில் பெரும்(!) தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் நேர்ந்திருப்பின் பொறுத்தருளவும் வினோத் 17:21, 11 டிசம்பர் 2007 (UTC)
-
- வினோத், என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். குறுகிய காலத்தில் எவ்வளவு செய்ய இயலும் என்பதை உங்கள் ஆக்கங்கள் ஐயம் திரிபற தெரிவிக்கின்றன. சிறு சிறு எழுத்துப் பிழைகள் உள்ளன, நான் இரண்டொரு நாட்களில் வந்து திருத்துகிறேன். பிறரும் செய்து உதவமுடியும். மீண்டும் என் பாராட்டுகள்!--செல்வா 17:44, 11 டிசம்பர் 2007 (UTC)
-
-
- வினோத், செல்வாவின் பாராட்டுக்களை நானும் பகிர்ந்து கொள்கின்றேன். பேச்சுத் தமிழுக்கு கிப்ட்டியதான மலையாளம் பெருங்கட்டுரையாக ஆக்கியதற்கு வாழ்த்துக்கள். எழுத்துப் பிழைகளைச் சரிசெய்த்துகொள்ளலாம். --உமாபதி 17:50, 11 டிசம்பர் 2007 (UTC)
-
-
- ஒரு Flowவில் மலையாளத்தை அப்படியே என்னால் எவ்வளவு தமிழ்ப்படுத்தமுடியுமோ தமிழாக்கிவிட்டேன். எனவே Flow பாதிக்காமல் இருக்க வடமொழிச்சொற்களை அப்படியே நிறைய கையாண்டுள்ளேன். அதை நீக்கிவிடுமாறு வேண்டுகிறேன் வினோத் 17:53, 11 டிசம்பர் 2007 (UTC)