பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி | ||
---|---|---|
நாடுகள்: | இந்தியா, வங்காளதேசம், மியன்மார் | |
பேசுபவர்கள்: | 450,000 | |
மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்தோ-ஐரோப்பியம் இந்தோ-ஈரானியம் இந்தோ-ஆரியம் வங்காள-அசாமியம் பிஷ்ணுப்பிரியா மணிப்புரி |
|
மொழிக் குறியீடுகள் | ||
ISO 639-1: | இல்லை | |
ISO 639-2: | inc | |
ISO/FDIS 639-3: | bpy | |
குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ உச்சரிப்பு குறிகள் யுனிகோட் வடிவில் காணப்படலாம். |
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். உள்ளூரில் இதனை இமார்தர் என அழைக்கின்றனர். இம் மொழி இந்தியாவில் மணிப்பூரிலும், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இவை தவிர வங்காளதேசம், மியன்மார் ஆகிய நாடுகளிலும் இம் மொழி பேசுவோர் குறைந்த அளவில் வாழ்கின்றனர். இது, வங்காள மொழி. அஸ்ஸாமிய மொழி, ஒரியா போன்ற பல இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்தும் பெருமளவுக்கு வேறுபடுகின்றது. இம்மொழி மணிப்பூரிலேயே தோற்றம் பெற்று வளர்ந்தது. தொடக்க காலங்களில் இம்மொழி லொக்டாக் ஏரியை அண்டிய பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்ததாகத் தெரிகிறது. இம் மொழி பற்றிய குறிப்புக்கள் 18 ஆம் நூற்றாண்டையும், அதற்குப் பிற்பட்ட காலத்து மூலங்களிலேயே கிடைக்கின்றன. தற்போது இம்மொழி புழங்கும் முக்கியமான பகுதிகள், கங்காபொக், ஹீரொக், மயாங் யம்பால், பிஷ்ணுபூர், குனான், நிங்தான்கோங், ஙய்கோங், தம்னாபொக்ஸ்பி என்பனவாகும்.