பாலக்காட்டு கணவாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலக்காட்டு கணவாய் (Palakkad Gap) மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 30-40 கிமீ அகலத்தில் அமைந்த ஒன்றாகும். இதுவே இம்மலைத் தொடரின் தாழ்வான பகுதியாகும். இது கேரள மாநிலத்தின் பாலக்காட்டு நகருக்கு அருகில் உள்ளது.
இக்கணவாய் இல்லையெனில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கேரள மாநிலத்தை தனிமை படுத்தியிருக்கும், இதுவே அருகிலுள்ள தமிழகத்துடன் இன்னும் குறிப்பாக கூறுவதானால் இந்திய நிலப்பரப்புடன் கேரளத்தை இணைக்கிறது.
இக்கணவாய் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தையும் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாதையாக உள்ளது. இது கேரளாவின் முதன்மையான வணிக வழித்தடமும் ஆகும். சாலை வழியாக கேரளத்தை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன.
இக்கணவாய் தென்இந்தியாவின் தட்பவெப்பத்தில் சிறப்பான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இது ஈரப்பதம் நிறைந்த தென்மேற்கு பருவக்காற்று கோயம்புத்தூர் பகுதிக்கு வர உதவுகிறது. இக்காரணத்தால் கோயம்புத்தூர் பகுதி கோடை காலத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட வெப்பம் குறைந்து காணப்படுகிறது. கோயம்புத்தூர் பகுதி தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட அதிக மழைப்பொழிவை பெருவதற்கும் இதுவே காரணமாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலை |
|
ஆறுகள் |
பத்ரா ஆறு | பீமா ஆறு | சாலக்குடி ஆறு | Chittar River | கோதாவரி ஆறு | கபினி ஆறு | காளி ஆறு | Kallayi River | காவிரி ஆறு | Koyana | கிருஷ்ணா ஆறு | குண்டலி ஆறு | மகாபலேஷ்வர் | Malaprabha River | மணிமுத்தாறு | நேத்ராவதி ஆறு | Pachaiyar River | பரம்பிக்குளம் ஆறு | பெண்ணாறு | சரஸ்வதி ஆறு | சாவித்திரி ஆறு | ஷராவதி ஆறு | தாமிரபரணி | தபதி ஆறு | துங்கா ஆறு | Venna |
பகுதிகள் |
கோவா கணவாய் | பாலக்காட்டு கணவாய் |
மலைகள் |
அகஸ்திய மலை | ஆனைமுடி | Banasura Peak | பிலிகிரிரங்கன் மலை | Chembra Peak | Desh Maharashtra region | தொட்டபெட்டா | Gangamoola peak | Harishchandragad | Kalsubai | கெம்மங்குடி | கொங்கன் | குதிரேமுக் | மஹாபலேஷ்வர் | மலபார் | மலைநாடு | முல்லயனகிரி | நந்தி மலை | நீலகிரி மலை | சாயத்திரி | Taramati | திருமலைத் தொடர் | வெள்ளாரிமலை |
அருவிகள் |
அப்பே அருவி | Chunchanakatte Falls | Gokak Falls | ஜோக் அருவி | Kalhatti Falls | Sathodi Falls | சிவசமுத்திரம் அருவி |
சார்ந்த மாநிலங்கள் |
கோவா | குஜராத் | கர்நாடகம் | கேரளா | மகாராஷ்டிரம் | தமிழ்நாடு |