பாக்கு நீரிணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாக் நீரிணை தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கிறது.மன்னார் வளைகுடாவிலிருந்து இதை மேட்டுப்பாங்கான ஆடம் பாலம் பிரிக்கிறது. இதன் குறுகிய பகுதி 53கி.மீ (33 மைல்) அகலம் உடையது. டச்சு ஆளுனராக இருந்த பாக் என்பாரின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.
இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கு தற்பொழுது (2006-) சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.