நேபாளத்தின் சின்னம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நேபாளத்தின் சின்னம் தமக்கென பொருளைக் கொண்ட பல உருவங்களின் தொகுப்பாகும். சின்னத்தின் உச்சியில் அரச முடி காணப்படுகிறது. அதன் கீழ் இரண்டு நேபாள தேசியக் கொடிகள் சாய்வாக காணப்படுகிறது. கொடிகளோடு இரண்டு குர்கீகளும் (குர்க்கா கத்தி) காணப்படுகிறது இவைகளால் அடைக்கப்பட்ட முக்கோண பிரதேசத்தில் கொரக்சாநாத் என்ற குர்காக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் இந்து கடவுளது பாத சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கு கீழாக இமய மலையும் rhododendron பூக்களும் வெண் பசுவும் பச்சை pheasant பறவையும் காணப்படுகின்றது. மேலும் சின்னத்தின் இருபுறத்திலும் இரண்டு குர்கா வீரர்கள் காணப்படுகிறார்கள். ஒருவர் குர்கீ மற்றும் வில்லம்புகளோடு காணப்படுவதோடு மற்றையவர் துப்பாக்கியோடு காணப்படுகிறார். சின்னத்தின் அடியில் செந்நிற பெயர் பட்டியில் சமஸ்கிருதத்தில் जननी जन्मभूिमश्च स्वर्गादिप गरीयसी (தாயும் தாய்நாடும் சொர்க்கத்தை விட மேலானவை) என எழுதப்பட்டுள்ளது.