தி. ஜ. ர.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திங்களூர் ஜகத்ரக்ஷக ஐயங்கார் ரங்கநாதன் - தி.ஜ.ர- ‘மஞ்சரி’ பத்திரிகை ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர். அது ஆரம்பிக்கும்போது பிறந்த தன் மகளுக்கு ‘மஞ்சரி’ என்றே பெயர் வைத்தவர். அபூர்வமான மனிதர், படிக்காத மேதை ( பள்ளிப்படிப்பில் ஆரம்பகட்டத்துக்குமேல் -மூன்றாவது/நான்காவது- தாண்டாதவர்), விஞ்ஞானத்தில்,குறிப்பாக, கணிதத்தில் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்துப் பின்னால் பத்திரிகைத் தொழிலில் புகுந்தவர். குழந்தை இலக்கிய முன்னோடி. சக்தி கோவிந்தன் நடத்திய ‘பாப்பா’ இதழின் ஆசிரியர்.
1 சிறுகதை : ‘நொண்டிக்கிளி’, ‘காளி தரிசனம்’ , ‘சந்தனக் காவடி’ போன்ற தொகுதிகள். முதலாவது தலைப்பு உருக்கமான கதை இரண்டாவதும் மூன்றாவதும் குறும்பானவை. ‘எப்படி எழுதினேன்’ புத்தகத்தில் இவற்றைப் பற்றி எழுதி இருக்கிறார்.
2 கட்டுரை: தமிழ் இலக்கியத்தில் ஈ.வீ.லூகாஸ், கார்டினர், மாக்ஸ் பீர்போம் போன்ற பல கட்டுரையாளர்களையும் தோற்கடிக்கும் முறையில் எழுதியவர். கட்டுரைத் துறைக்கு ஒரு முன்னோடி.பல தொகுதிகள்
3 மொழிபெயர்ப்பு: ‘குமாவூன் புலிகள்’ வெண்டல் வில்கியின் ‘ஒரே உலகம்’ லூயி கராலின் அலீஸ் ( அலமுவின் அதிசய உலகம் என்ற தலைப்பில்) இன்னும் பல.