திருவையாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).