தனுஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தனுஷ் | |
---|---|
இயற் பெயர் | பிரபு கஸ்தூரிராஜன்[1] |
பிறப்பு | 1978 பெப்ரவரி 25[1] சென்னை, இந்தியா |
துணைவர் | ஐஸ்வர்யா[1] |
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். அவரது சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமை தனுஷ் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனுஷ் தனது திரையுலக அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது சமீபத்தைய திரைப்படங்கள் பாரியளவு வெற்றி அடையாமற் போனாற் கூட தனுஷ் தற்போதய தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராகக் கருதப்படுகிறார்.
தனுஷ் தற்போது செல்வராகவனின் இயக்கத்தில் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்து மறுபடியும் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார்.
2004-ஆம் ஆண்டில் தனுஷ், பிரபல தமிழ் நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.
[தொகு] நடித்த திரைப்படங்கள்
- துள்ளுவதோ இளமை
- காதல் கொண்டேன்
- திருடா திருடி
- புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
- சுள்ளான்
- தேவதையைக் கண்டேன்
- ட்ரீம்ஸ்
- அது ஒரு கனாக்காலம்
- புதுப்பேட்டை
- திருவிளையாடல் ஆரம்பம்
- பரட்டை என்கிற அழகுசுந்தரம்
- பொல்லாதவன்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Biography for Dhanush. IMDb. இணைப்பு 2007-05-13 அன்று அணுகப்பட்டது.