சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் (ஆங்கிலம்: Singapore Changi Airport, மலாய்: Lapangan Terbang Changi Singapura, சீனம்: 新加坡樟宜机场, பின்யின்: Xīnjiāpō Zhāngyí Jīchǎng) சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான விமான நிலையம் ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில விமானசேவை நிறுவனங்கள் இவ்விமான நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும்.