கியொசெரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கியொசெரா (Kyocera) என்பது சப்பானில் தொடங்கி இயங்கும் ஓர் உலகளாவிய தொழில் நிறுவனம். இந்நிறுவனம் ஒளிப்படக் கருவிகள், அச்சுப் பொறிகள் செய்வதிலும் சுட்டாங்கல் (ceramics) உற்பத்தி செய்வதிலும் தொழிலாற்றி வந்தது. இந்நிறுவனத்தை கசுவொ இனாமோரி 1959ல் நிறுவினார். இவர் கியோட்டோ பரிசு அறக்கட்டளையை நிறுவினார்.
2003 ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள் செய்ய ஒரு துணை நிறுவனம் தொடக்கப்பட்டுளது. இதன் பெயர் கியொசெரா வயர்லெஸ் இந்தியா (Kyocera Wireless India ).