கானமூர்த்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கானமூர்த்தி இராகம் மேளகர்த்தா இராகங்களில் 3வது மேளம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது.
[தொகு] இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க1 ரி1 ஸ |
- 3 வது மேளகர்த்தா. இந்து என்றழைக்கப்படும் முதல் சக்கரத்தில் 3 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு விவாதி மேளம்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழைகைக் கொடுக்கிறது.
[தொகு] உருப்படிகள்
- கிருதி: கானமூர்த்தே, ஆதி தாளம், தியாகராஜ சுவாமிகள்
- கிருதி: மாமதுரஸா, ஆதி தாளம், கோடீஸ்வர ஐயர்
- கிருதி: சிறீபதே, ருபக தாளம், வீணை சேஷண்ணா
- கிருதி: நம்பி வாழ்கிறேன், ஆதி தாளம், சுத்தானந்த பாரதியார்