கமலாதாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கமலாதாஸ் 1934இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறப்பு. ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதுகிறவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்'(1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கவிதைக்காக 'இந்திய சாஹித்திய அக்கடமி' விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதிவருகிறார்.