கனிமொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனிமொழி தமிழக அரசியல்வாதி, தமிழ் கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் மகள் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] குடும்பம்
மு. கருணாநிதி அவர்களுக்கும், ராஜாத்தி அம்மையாருக்கும் 1968 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வண்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியில் பயின்றார். 1989 ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை மணந்தார். பின்பு அம்மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. பின்பு ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், நிறைய இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். நிதி அமைச்சர் பி. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய குழு அமைப்பை நடத்தி வருகிறார்.
[தொகு] பணி
ஹிந்து என்னும் நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். மற்றும் தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை கலாச்சார நிகழ்ச்சி ஒருகிணைப்பாளராக இயங்கினார். மற்றும் ஈழ பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் குறும் படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர்.
[தொகு] இலக்கியம்
[தொகு] கவிதைத் தொகுப்புகள்
- கருவறை வாசனை
- அகத்திணை
- பார்வைகள்
- கருக்கும் மருதானி
[தொகு] இசை தொகுப்புகள்
சிலப்பதிகாரம் (பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து)
[தொகு] வெளி இணைப்புக்கள்
- நிலாச்சாரல் தகவல்கள் (ஆங்கிலத்தில்)