கணியன் பூங்குன்றனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தொழிலையும் சிறப்பையும் குறிக்கும் பெயராக அமைந்துள்ள பழந்தமிழ்ப் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. கணியம் என்பது சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவ்வாறு பூங்குன்றன் கணியன் பூங்குன்றரானார். வளம் நிறைந்த நாட்டில் உள்ளவனை, அல்லது தலைவனைப் "பூங்குன்ற நாட!" என்கிறது நாலடி நானூறு. இவ்வாறு தொழிலாலும் நாட்டாலும் பேர் பெற்றவர் இப்புலவர்.
புறநானூற்றிலும் (புறம்: 192) நற்றிணையிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் புறநானூற்றுப் பாடல் நம் தமிழ் முன்னோர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
“ |
யாதும் ஊரே யாவரும் கேளிர் |
” |
[தொகு] உசாத்துணை
- இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் (2003), சென்னை: அருணோதயம்.