ஐஎஸ்ஓ 9000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐஎஸ்ஓ 9000 (ISO 9000) என்பது, பண்பு மேலாண்மைத் (quality management) தேவைகள் தொடர்பாக சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் (International Organisation for Standardisation) உருவாக்கப்பட்ட சீர்தரங்களின் தொகுதியைக் குறிக்கும். வணிக முயற்சிகளுக்கு இடையேயான பண்பு மேலாண்மைத் தேவைகளுக்காக உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளிலும் இந்த சீர்தரங்கள் (Standard) இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
[தொகு] நோக்கங்கள்
ஐஎஸ்ஓ 9000 குடும்பத்தைச் சேர்ந்த நியமங்கள், உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் முயற்சியில், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியே கவனம் செலுத்துகின்றன.
[தொகு] பயன்பாட்டு எல்லை
அனைத்துலக நியமப்படுத்தல் நிறுவனத்தின் பெரும்பாலான நியமங்கள் போலன்றி, ஐஎஸ்ஓ 9000 குடும்பத்தைச் சேர்ந்த சீர்தரங்கள் எல்லாத் துறைகளிலும் உள்ள பல்வேறு அளவு கொண்ட நிறுவனங்களாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட உற்பத்திப் பொருட்களின் பண்புகள் பற்றிப்பேசாது, அவற்றை உற்பத்திசெய்யும் நிறுவனங்களின் மேலாண்மை முறைமைகள் பற்றி மட்டுமே பேசுவதால் இது சாத்தியமாகின்றது.