எம் மகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம் மகன் | |
இயக்குனர் | எம்.திருமுருகன் |
---|---|
நடிப்பு | பரத் கோபிகா நாசர் வடிவேல் கஜாலா |
வினியோகம் | சத்யா மூவீஸ் |
வெளியீடு | 2006 |
கால நீளம் | நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
எம் மகன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
[தொகு] வகை
நகைச்சுவைப்படம் / காதல்படம்
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பலசரக்குக் கடை ஒன்றினை வைத்து நடத்தும் எம்டன் (நாசர்) மிகவும் கோப சுபாவமுடையவர்.சிறிதாக ஏதாவது பிரச்சனையென்றால் அப்பிரச்சனையைப் பெரிதுபடுத்துபவராகவும் திகழ்கின்றார் எம்டன்.தனது மகனான கிருஷ்ணனை கல்லூரியில் மாண்வர்கள் மத்தியில் அவமானப்படுத்தும் வகையில் பேசும் எம்டன் அவரைத் தனது கடையில் கூலியாள் போன்று நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.திருட்டுப்போன பணத்திற்காக காரணமின்றி கிருஷ்ணாவைத் தாக்கவும் செய்கின்றார் எம்டன்.பின்னர் உண்மை என்பதனைத் தெரிந்து அவருக்கு உணவு ஊட்டவும் செய்கின்றார்.ஒரு முறை இவர் மதுரைக்குச் செல்லும் சமயம் பார்த்து தனது இளம்வயது சிநேகிதியான ஜனனியின் (கோபிகா) ஊருக்கு தனது தாயாருடன் செல்கின்றார்.அங்கு ஜனனியைக் காணது மனம் நொந்து போகும் கிருஷ்ணா பின்னர் ஜனனி வீட்டிலிருந்த தாத்தா இறந்து போகவே அவர்கள் வீட்டிற்கு எம்டன் குடும்பத்தினர் செல்ல நேரிட்டது,அச்சமயம் ஜனனியைச் சந்தித்துக் கொள்ளும் கிருஷ்ணா தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.இவர்கள் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட எம்டனும் ஜனனியின் குடும்பத்தாரும் கிருஷ்ணாவையும்,ஜனனியையும் அடித்தனர்.இதற்குப் பிறகு பகை ஏற்படும் இரு குடும்பத்தாரும் இருவரையும் சேர விடாது தடுத்த போதும் ஜனனியும் கிருஷ்ணாவும் சேர்ந்தே வாழ்கின்றனர்.பின்னர் கிருஷ்ணாவின் தாய்மாமனான ஜயாக்கண்னுவின் (வடிவேல்) உதவியினால் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.கிருஷ்ணனும் பெரிய தொழில் நிறுவனமொன்றில் வேலை பார்த்து கை நிறையப் பணத்தினையும் சம்பாதித்துக் கொள்கின்றான்.ஆனாலும் தனது தந்தையை மறக்காது அவரிடம் சென்று தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்கின்றான்.எம்டன் குடும்பம் கிருஷ்ணன் கூட தங்கியிருக்கின்றனரா என்பது திரைக்கதையின் முடிவு.