என். டி. ராமராவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என். டி. ராமராவ் నందమూరి తారక రామా రావు |
|
---|---|
பிறப்பு | மே 28 1923 நிம்மகுரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | ஜனவரி 18 1996 (அகவை 72) ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா மார்படைப்பு |
வேறு பெயர்கள் | NTR |
பெயர் ஈட்டியது அறியப்படுவது |
திரைப்படம், அரசியல் |
பின்வந்தவர் | சந்திரபாபு நாயுடு |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
வாழ்க்கைத் துணை |
பசாவராமா, லக்ஷ்மி பார்வதி |
பிள்ளைகள் | ஜெயகிருஷ்ணா, சாயிகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, மோகன்கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர்கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தேசுவரி, புவனேசுவரி, உமாமகேசுவரி |
என். டி. ராமராவ் அல்லது என். டி. ஆர் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மூன்று தடவை பொறுப்பு வகித்தார். தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.