பேச்சு:இனுக்ரிருற்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இனுக்ரிருற் மொழி என்று ஏற்கனவே இன்னொரு பக்கம் உள்ளதே ? இரண்டிலும் உள்ள தகவல்களை ஒரு பக்கத்திற்கு மாற்றிய பின் மற்ற பக்கத்தை அழித்து விடலாம்.--ரவி (பேச்சு) 10:20, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
-
- இனுக்ரிருற் மொழி பற்றி நான் முன்னர் வலைப்பதிவில் எழுதியதை தான் இங்கு இட்டேன். முன்னர் யாரோ இதை இங்கு இட்டிருக்க வேண்டும். இரண்டுக்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை. ஒன்றை நீங்கள் கூறிய படி அழித்துவிடலாம். --Natkeeran 14:22, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
நான் கூறுவதைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். றகர ஒற்றில் முடிவது சிறப்பாகத் தெரியவில்லை. இதை இலங்கைத் தமிழர்கள் ஆளுகின்றார்கள். பட் என்று சொல்லு, சட் என்று முடிவு செய் என்று, டகர ஒற்றில் முடியும் சொல்லின் பகுதிகள் உள்ளன. தமிழ்ச்சொல் ஒன்று டகர ஒற்றில் முடி்யாது என்றாலும், டகர ஒற்று மொழி இயல்புக்கு ஒரு சிறிது ஏற்றதாக உள்ளது. றகர ஒற்றில் இவ்வாறு சொல்லின் பகுதிகள் இருக்குமானால் தெரிவிக்கவும். ஏன் டகர ஒற்றில் முடிவதை இலங்கைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. அறிந்தவர்கள் எடுத்துரைத்தால் நலமாக இருக்கும்.--C.R.Selvakumar 00:26, 5 ஜூன் 2006 (UTC)செல்வா
ஏற்கனவே இவ்வுரையாடல் பல தளங்களில் நிகழ்ந்துள்ளது. இவ்விடயங்கள் நோக்கி போதிய விளக்கங்கள் என்னிடம் இல்லை. இதுவரை இதை எவ்வாறு த.வி. சமாளிக்கின்றோம் என்றால், யார் முதலில் கட்டுரை இடுகின்றார்களோ, மற்ற சொற்தொடரை வழிமாற்றம் செய்துவிடுகின்றோம். நாளடைவில் இரு சமூகங்களும் தங்களுடைய போக்குக்களை அறிய இது வாய்ப்பாக அமையும், அதேவேளை ஒரு தீர்க்கமான முடிவை எட்ட வேண்டிய தேவையையும் தற்போதைக்காவது தள்ளிப்போடும். --Natkeeran 00:43, 5 ஜூன் 2006 (UTC)
[தொகு] பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://north.cbc.ca/north/archive/language/
- In இனுக்ரிருற் on 2007-05-06 10:22:45, 404 Not Found
- In இனுக்ரிருற் on 2007-05-06 11:31:41, 404 Not Found
- In இனுக்ரிருற் on 2007-05-14 00:57:19, 404 Not Found
--TrengarasuBOT 00:58, 14 மே 2007 (UTC)