அருந்ததி ராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிறப்பு: | 1961 நவம்பர் 24 |
---|---|
தன்மையாளர்: | நாவலாசிரியை, கட்டுரையாளர் |
தேசியம்: | இந்தியர் |
எழுதிய காலம்: | 1996ல்-இன்றுவரை |
முதல்படைப்பு: | த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் |
அருந்ததி ராய் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நவம்பர் 24, 1961-ல் பிறந்தார். பின்னர் தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் புது தில்லியில் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றார்.
தனது முதல் நாவலான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் (The God of Small Things) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார். இவர் மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார். 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை இவர் மறுத்து விட்டார்[1].
[தொகு] வெளி இணைப்புகள்
- அருந்ததி ராயின் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை கீற்று இதழில் (தமிழில்)
- அருந்ததி ராய் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு-எழுத்து, ஒலி வடிவில் (ஆங்கிலத்தில்)