Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மரம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பவோபாப் மரம் தென்னாபிரிக்காவிலுள்ளது
பவோபாப் மரம் தென்னாபிரிக்காவிலுள்ளது
கலி'வோர்னியா மாநிலத்தில வளரும் செம்மரம்.
கலி'வோர்னியா மாநிலத்தில வளரும் செம்மரம்.

மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலத்திணை வகை. இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன.

பொருளடக்கம்

[தொகு] உருவவியல் (Morphology)

வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் (xylem) மற்றும் உரியம் (phloem)) கொண்டது. wood, காழ்க் கலங்களைக் கொண்டது, மரப்பட்டை முக்கியமாக உரியங்களால் ஆனது. மரம் வளரும்போது இது ஆண்டு வளையங்களை உருவாக்குகின்றது. மிதவெப்ப மண்டலக் (temperate) காலநிலைப் பிரதேசங்களில் இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக் கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் பெரும்பாலும் நிலத்திற்கடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள உதவுவதுடன், மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குப் பொருட்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன. தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளி தேவை. இலைகளின் மூலமே இச் செயற்பாடு நடைபெறுகின்றது. மரங்கள் அடர்த்தியாகவுள்ள இடங்களில் ஒளிக்காக மற்றத் தாவரங்களுடன், போட்டியிடவேண்டியுள்ளது. இதற்கு உதவும்பொருட்டுத், தண்டுகள், இலைகளைக் கொண்டுள்ள கிளைகளை உயரத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பல தாவரங்களில், இலைகள் கூடிய அளவு சூரிய ஒளியைப் பெறத்தக்கவகையில், கிளைகளின் ஒழுங்கு அமைந்திருக்கும்.

எல்லா மரங்களும் முன் கூறிய பாகங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாகப் palmகள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. வட அமெரிக்காவில் வளரும் சாகுவாரோ கக்டஸ்களுக்குச் செயற்பாடுள்ள இலைகள் இல்லை. மரப் பன்னங்கள் பட்டைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் பருமட்டான வடிவத்தையும், அளவையும், அடிப்படையாக வைத்து இவையனைத்தும் மரங்களாகவே கொள்ளப்படுகின்றன. சில சமயம் அளவே முக்கியமாகக் கருதப்படுகின்றது. பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது. சிறியனவாக இருப்பதால் "பொன்சாய்"கள் மரங்கள் என்று கொள்ளப்படமுடியாது, எனினும் மரவகைகளின் வடிவத்தைக் கருதும்போது, தனியொரு specimen இன் வடிவத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை.

ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு எனப்படுகின்றன, பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும்போது அது காடு எனப்படுகின்றது. பெரிய ஆனால் ஐதாக இருக்கும் மரங்களையும் இடையில் புல்வெளிகளையும் (வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட) கொண்ட பகுதி வெப்பப் புல்வெளி (savanna) எனப்படுகின்றது.

[தொகு] முக்கிய மரச் சாதிகள் (genera)

மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள் வடிவங்கள், பட்டை, பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்பகால மாரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும். கிழேயுள்ள பட்டியல் பெரிதும் அறியப்பட்ட மரங்களின் பெயர்களையும், அவை பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது.


[தொகு] பூக்கும் தாவரங்கள் (Magnoliophyta)

[தொகு] இருவித்திலைத் தாவரங்கள் (Magnoliopsida)

  • அனக்காடியேசியே (மரமுந்திரி குடும்பம்)
    • மரமுந்திரி, அனக்காடியம் ஒக்சிடென்தலே
    • மா, மங்கிபேரா இந்திகா
    • Pistachio, பிஸ்தாசியா வேரா (Pistacia vera)
    • Lacquer tree, டொக்சிகோடென்றன் வேர்ணிசிபு(f)ளூவா (Toxicodendron verniciflua)
  • Aquifoliaceae (Holly குடும்பம்)
    • Holly, Ilex வகை
  • அரலியேசியே (Ivy குடும்பம்)
    • Kalopanax, கலோபானக்ஸ் பிக்டஸ் (Kalopanax pictus)
  • Betulaceae (Birch குடும்பம்)
    • Alder, Alnus வகை
    • Birch, Betula வகை
  • பொ(b)ம்பாகேசியே (Baobab குடும்பம்; sometimes included in மல்வேசியே)
    • Baobab, அடன்சோனியா வகை
    • Silk-cotton tree, பொ(b)ம்பா(b)க்ஸ் சீபா(b) (Bombax ceiba)
    • Kapok, சீபா பெண்டந்திரா (Ceiba pentandra)
    • துரியான், துரியோ ஸிபெத்தினஸ் (Durio zibethinus)
    • பல்சா, ஒகுரோமா லகோ(g)பஸ் (Ochroma lagopus)
  • பர்சரேசியே
    • கார்வேம்பு, கரூகா பின்னாட்டா (Garuga pinnata)
  • கக்டாசியே (Cactus குடும்பம்)
    • Saguaro, கார்னேஜியே ஜைஜண்டியா (Carnegiea gigantea)
  • கோர்னாசேசியே (Dogwood குடும்பம்)
    • Dogwood, கோர்னஸ் (Cornus) வகை
  • கோரிலேசியே (ஹஸெல் குடும்பம்)
    • Hornbeam, கார்பினஸ் (Carpinus) வகை
    • Hazel, கோரிலஸ் (Corylus) வகை
  • பா(f)பே(b)சியே (Pea குடும்பம்)
    • Honey locust, Gleditsia triacanthos
    • Black locust, Robinia pseudoacacia
    • Laburnum, லபூர்னம் (Laburnum) வகை
    • Pau Brasil, Brazilwood, Caesalpinia echinata
  • பா(f)கே(g)சியே (பீ(b)ச் குடும்பம் )
    • Chestnut, Castanea வகை
    • பீ(b)ச், Fagus வகை
    • Southern beech, Nothofagus வகை
    • Tanoak, Lithocarpus densiflorus
    • ஓக், Quercus வகை
  • Fouquieriaceae (Boojum குடும்பம்)
    • Boojum, போர்குவேரியா கொலம்னாரிஸ் (Fouquieria columnaris)
  • Hamamelidaceae (Witch-hazel குடும்பம்)
    • Sweet-gum, லிக்குயிடம்பர் (Liquidambar) வகை
    • Persian ironwood, பரோட்டியா பேர்ஸிக்கா (Parrotia persica)
  • ஜக்லண்டேசியே (Walnut குடும்பம்)
    • Walnut, ஜக்லான்ஸ் (Juglans) வகை
    • Hickory, Carya வகை
  • லோரேசியே (Laurel குடும்பம்)
    • கறுவா சினமோமம் ஸெலனிக்கம் (Cinnamomum zeylanicum)
    • Bay laurel லோரல் நொபிலிஸ் (Laurus nobilis)
    • அவகாடோ பேசியா அமெரிக்கானா (Persea americana)
  • லைத்திரேசியே Loosestrife குடும்பம்
    • Crape myrtle Lagerstroemia வகை
  • மக்னோலியேசியே (Magnolia குடும்பம்)
    • Tulip tree, Liriodendron species
    • Magnolia, Magnolia வகை
  • மல்வேசியே (திலியேசியே உள்ளடங்கியது) (Mallow குடும்பம்.)
    • Linden (Basswood, Lime), Tilia வகை
  • மெலியேசியே (மலைவேம்பு குடும்பம்)
    • வேம்பு, Azadirachta indica (A. Juss)
    • Bead tree, மெலியா அஸெடராச் (Melia azedarach)
    • மலை வேம்பு, சுவீதெனியா மககோனி (Swietenia mahagoni)
  • மோராசியே
    • ஆல், பை(f)க்கஸ் பெ(b)ங்காலென்சிஸ் (Ficus benghalensis)
    • அரசு, பை(f)க்கஸ் ரிலிஜியோசா (Ficus religiosa)
  • மைரிஸ்டிகேசியே (சாதிக்காய் மரம் குடும்பம்)
    • சாதிக்காய் மரம், மைஸ்ரிஸ்டிகா பி(f)ராகிரன்ஸ் (Mysristica fragrans)
  • மிர்ட்டேசியே (Myrtle குடும்பம் )
    • யுகலிப்டஸ், யுகலிப்டஸ் வகை
    • Myrtle, Myrtus வகை
    • கொய்யா, சிடியம் குவாஜாவா (Psidium guajava)
    • நாவல், Syzygium cumini
படிமம்:Davidia1.jpg
நைசாசியே (Nyssaceae):பூத்திருக்கும் ஒரு Dove tree
  • நைசாசியே (Tupelo குடும்பம்; சிலசமயம் Cornaceaeல் உள்ளடக்கப்படுகின்றது)
    • Tupelo, Nyssa வகை
    • Dove tree, தாவிதியா இன்வொலுகிராட்டா (Davidia involucrata)
  • ஒலியேசியே (ஒலிவ் குடும்பம்)
    • ஒலிவ், Olea europaea
    • Ash, பிரக்ஸினஸ் (Fraxinus) வகை
  • பப்பிலியோனேசியே
  • பிளாட்டனேசியே (Plane குடும்பம்)
    • Plane, பிளாட்டனஸ் வகை
  • ரிஸோபோராசியே (Mangrove குடும்பம்)
    • Red Mangrove, ரிஸோபோரா மங்கிள் (Rhizophora mangle)
  • ரோசேசியே (ரோஜா குடும்பம்)
    • Rowan, Sorbus வகை
    • Hawthorn, Crataegus வகை
    • Pear, Pyrus வகை
    • அப்பிள், Malus வகை
    • Almond, புரூணஸ் துல்ஸிஸ் (Prunus dulcis)
    • பீச், புரூணஸ் பேர்ஸிக்கா (Prunus persica)
    • பிளம், புரூணஸ் டொமெஸ்ட்டிக்கா (Prunus domestica)
    • செர்ரி, புரூணஸ் வகை
  • Rubiaceae (Bedstraw குடும்பம்)
  • Rutaceae (Rue குடும்பம்)
    • தோடை, Citrus aurantium
    • Lemon, Citrus limon
    • Cork-tree, Phellodendron வகை
    • Euodia, Tetradium வகை
  • Salicaceae (Willow குடும்பம்)
    • Aspen, Populus வகை
    • Poplar, Populus வகை
    • Willow, Salix வகை
  • Sapindaceae (including Aceraceae, Hippocastanaceae) (Soapberry குடும்பம்)
    • மேப்பிள், Acer வகை
    • Buckeye, Horse-chestnut, Aesculus வகை
    • Mexican buckeye, Ungnadia speciosa
    • Lychee, Litchi sinensis
    • Golden rain tree, Koelreuteria paniculata
  • Sapotaceae family
    • Tambalacoque, or dodo tree, Sideroxylon grandiflorum, previously Calvaria major
  • Simaroubaceae குடும்பம்
    • Tree of heaven, Ailanthus வகை
  • Sterculiaceae குடும்பம்
    • Cacao (cocoa), Theobroma cacao
  • Ulmaceae (Elm குடும்பம்)
    • Hackberry, Celtis வகை
    • Elm, Ulmus வகை

[தொகு] ஒருவித்திலைத் தாவரங்கள் (Liliopsida)

  • அகாவேசியே (அகாவே குடும்பம்)
    • Cabbage palm, கோர்டிலைன் அவுஸ்திரேலிஸ் (Cordyline australis)
    • Dragon மரம், ட்றசீனா ட்றாக்கோ (Dracaena draco )
    • Joshua மரம், Yucca brevifolia
  • அரெகேசியே (Palmae) (Palm குடும்பம்)
    • கமுகு, அரெக்கா காட்டெச்சு
    • தென்னை கோகோஸ் நியூசிபெ(f)ரா
    • பேரீந்து Palm, Phoenix dactylifera
    • Chusan Palm, Trachycarpus fortunei
  • போவாசியே (புல் குடும்பம்)
  • வாழைகள், மரத்தன்மையற்றதாலும், பல்லாண்டுத் தாவரமல்லாததாலும், உண்மையில் மரங்களல்ல என்பதைக் கவனிக்கவும்.

[தொகு] ஊசியிலை மரங்கள்

Public domain புகைப்படம் www.nps.gov/redw/ இலிருந்து
Coast redwood, உலகின் அதி உயரமான மர வகை; ஒரு ஊசியிலை மரம்
  • Araucariaceae (Araucaria குடும்பம்)
    • Araucaria, அரொகேரியா வகை
    • Kauri, அகாதிஸ் வகை
  • குப்பிரசாசியே (சைப்பிரஸ் குடும்பம்)
    • சைப்பிரஸ், குப்பிரசெஸ் வகை
    • சைப்பிரஸ், Chamaecyparis வகை
    • Juniper, Juniperus வகை
    • Alerce or Patagonian cypress, Fitzroya cupressoides
    • Sugi, Cryptomeria japonica
    • Coast redwood, Sequoia sempervirens
    • Giant sequoia, Sequoiadendron giganteum
    • Dawn redwood, Metasequoia glyptostroboides
    • Bald சைப்பிரஸ், Taxodium distichum
  • பைனாசியே (பைன் குடும்பம்)
    • வெண் பைன், பைனஸ் வகை
    • Pinyon பைன், பைனஸ் வகை
    • பைன், பைனஸ் வகை
    • Spruce, பீசியா வகை
    • Larch, லாரிக்ஸ் வகை
    • டக்லஸ்-பே(f)ர், Pseudotsuga வகை
    • பே(f)ர், Abies வகை
    • செடார், Cedrus வகை
  • Podocarpaceae (Yellow-wood குடும்பம்)
    • African yellow-wood, Afrocarpus falcatus
    • Totara, Podocarpus totara
  • Taxaceae (Yew குடும்பம்)
    • Yew, Taxus வகை

[தொகு] Ginkgos

  • Ginkgoaceae (Ginkgo குடும்பம்)
    • Ginkgo, Ginkgo biloba

[தொகு] சைக்கட்டுகள் (வித்துமூடியிலித் தாவரங்கள்)

  • சைக்கடேசியே குடும்பம்
    • Ngathu சைக்காட், சைக்கஸ் ஆங்கிலாட்டா (Cycas angulata)
  • Zamiaceae குடும்பம்
    • Wunu cycad, Lepidozamia hopei

[தொகு] பன்னங்கள் (Fern)

  • Cyatheaceae and Dicksoniaceae families
    • மரப் பன்னங்கள், Cyathea, Alsophila, Dicksonia (ஒரு monophyletic கூட்டமல்ல)

[தொகு] வாழ்வுக் கட்டங்கள்

மரங்களின், விசேடமாக ஊசியிலை மரங்களின், வாழ்க்கை வட்டம், காடு வளர்ப்புத் துறையில், கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தும் நோக்கங்களுக்காக பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது:

  1. விதை
  2. நாற்று: விதையிலிருந்து முளைத்துவரும், முளையத்தின் நிலத்துக்கு மேலுள்ள பகுதி.
  3. Sapling: முளையம் வளர்ந்து 1மீ உயரத்திலிருந்து அதன் தண்டு 7 சமீ விட்டமுள்ளதாக ஆகும் வரையுள்ள கட்டம்.
  4. Pole: 7 தொடக்கம் 30 சமீ விட்டமுள்ள இளம் மரங்கள்.
  5. முதிர்ந்த மரம்: 30 சமீ க்கு மேற்பட்ட விட்டம், இனப்பெருக்கக் காலத்தின் தொடக்கம்.
  6. முதிய மரம்: பழைய வளர்ச்சிக் காடுகளில் அதிகம்; உயர வளர்ச்சி பெருமளவு குறைந்துவிடும், அதிகரித்த விதை உற்பத்தி.
  7. அளவுமீறிய முதிர்ச்சி: dieback மற்றும் பழுதடைதல் சாதாரணம்.
  8. Snag: நிற்கும் இறந்த மரங்கள்
  9. மரக்குற்றி/கழிவு: விழுந்த மரக்குற்றிகள்

மரத்தின் விட்டம், அதன் அடியில், நிலத்தின் அதியுயர்ந்த புள்ளியிலிருந்து 1.3 - 1.5 மீட்டர் உயரத்தில் அளக்கப்படுகின்றது. 7 சமீ விட்ட வரையறை பொருளாதார ரீதியிலானது. இதுவே கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்காக விற்கப்படக்கூடிய அதி குறைந்த விட்டமாகும். 30 சமீ விட்டமே அரியப்படும் மரங்களுக்கான ஆகக்குறைந்த விட்டம். ஒவ்வொரு கட்டமும் may be uniquely perceptive to different pathogens and suitable for especially adapted arboreal animals.

[தொகு] பண்பாடு

மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கிய குறியீடுகளாக இருந்துவருகின்றன. உதாரணமாக நோர்ஸ் பழங்கதைகளில்Yggdrasil, ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம்.

[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்

  • மரங்களின் பட்டியல்
  • உலகின் மரங்கள்
    • பிரித்தானியாவினதும், அயர்லாந்தினதும் மரங்கள்
    • கனடாவின் மரங்கள்
    • கரிபியன் Basin மரங்கள்
    • நியூசிலாந்தின் மரங்கள்
  • நத்தார் மரம்
  • பிரபல மரங்களின் பட்டியல்
  • பழ மரங்கள்
  • காடு வளர்ப்பு
  • காடழிப்பு
  • மரப் பண்ணை
  • Wood
    • List of woods
  • Woodland முகாமைத்துவம்
  • பொன்சாய்
  • Arboreta
  • Pinetum
  • பூங்காத் தாவரங்களின் பட்டியல்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com