இலங்கையின் மாகாணங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை |
இது சார்பு கட்டுரைகளின் பாகமாகும்: |
|
|
இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணசபைகள் இணைந்து ஒரு அலகாக நிர்வகிப்படுகிறது. மற்றைய 7 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன.
பொருளடக்கம் |
[தொகு] தோற்றம்
சுதந்திரத்துக்குப் பின், இலங்கையில் நடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில
- 1973/74 மாவட்ட அரசியல் அதிகார சபை முறை
- 1979/80 மாவட்ட அபிவிருத்தி சபை/மாவட்ட அமைச்சர் முறை
- 1987/88 மாகாணசபை முறை
[தொகு] சட்டம்
1987 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
[தொகு] நிர்வாகம்
மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
- ஆளுனர்
- மந்திரி சபை
- முதலமைச்சர்
- 4 மாகாணசபை அமைச்சர்கள்
- மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு
- தலைமை செயலாளர்
[தொகு] தகவல்கள்
மாகாணம் | தலைநகர் | பரப்பளவு (ச.கி.மீ.) |
மாவட்டங்கள் |
---|---|---|---|
மத்திய | கண்டி | 5,584 | 3 |
கிழக்கு | திருகோணமலை | 9,951 | 3 |
வட-மத்திய | அனுராதபுரம் | 10,724 | 2 |
வடக்கு | யாழ்ப்பாணம் | 8,882 | 5 |
வடமேற்கு | புத்தளம் | 7,812 | 2 |
சபரகமுவா | இரத்தினபுரி | 4,902 | 2 |
தெற்கு | காலி | 5,559 | 3 |
ஊவா | பதுளை | 8,488 | 2 |
மேற்கு | கொழும்பு | 3,709 | 3 |
[தொகு] இவற்றையும் பார்க்க
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேற்கு மாகாணம் | மத்திய மாகாணம் | தெற்கு மாகாணம் | வடக்கு மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |