Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
முத்தையா முரளிதரன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

முத்தையா முரளிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முத்தையா முரளிதரன்

இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் முத்தையா முரளிதரன்
பிறப்பு ஏப்ரல் 17 1972 (வயது 36)
கண்டி, இலங்கை
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலக்கை ஓஃப் சுழற்பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 54) ஆகஸ்ட் 28 1992: v அவுஸ்திரேலியா
கடைசித் தேர்வு டிசம்பர் 1 2007: v இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 70) ஆகஸ்ட் 12 1993: v இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 28 2007:  v அவுஸ்திரேலியா
சட்டை இல. 08
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1991/92 - இற்றைவரை தமிழ்ச்சங்கத் துடுப்பாட்டக்கழகம்
1999 - 2007 லங்காஷயர்
2003 கென்ட்
Career Statistics
தேர்வு ஒ.ப.து. மு.து. A தரம்
ஆட்டங்கள் 116 297 215 378
ஓட்டங்கள் 1,144 491 2,075 693
துடுப்பாட்ட சராசரி 11.67 5.77 11.33 6.41
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதிக ஓட்டங்கள் 67 27 67 27
பந்து வீச்சுகள் 38,504 16,094 61,398 20,095
இலக்குகள் 713 455 1287 575
பந்துவீச்சு சராசரி 21.69 22.68 18.87 22.97
சுற்றில் 5 இலக்குகள் 61 8 113 10
ஆட்டத்தில் 10 இலக்குகள் 20 n/a 32 இல்லை
சிறந்த பந்துவீச்சு 9/51 7/30 9/51 7/30
பிடிகள்/ஸ்டம்புகள் 65/– 117/– 116/– 138/–

டிசம்பர் 6, 2007 தரவுப்படி
மூலம்: CricketArchive

முத்தையா முரளிதரன் (பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி இதுவரை (டிசம்பர் 6, 2007 இல்) 713 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார்.[1] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் இரண்டாவதாக உள்ளார்.[2] இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார் [3].

இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியை திருமணம் செய்துக்கொண்டார்[4].

பொருளடக்கம்

[தொகு] ஆரம்ப வாழ்க்கை

சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.

[தொகு] துடுப்பாட்ட வீரராக

இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.

துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 650ற்கும் அதிகமான தேர்வு இலக்குகளையும் 400ற்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.

[தொகு] உலகசாதனைகளும் அடைவுகளும்

முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:

  • தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் ஜூலை 14 2007இன் படி)[5]
  • தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (20).[6]
  • தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60) [7]
  • ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
  • தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [8]
  • தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [9]
  • வேகமான 350[10], 400[11], 450[12], 500[13], 550[14], 600[15], 650[16] மற்றும் 700[17] தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
  • நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.[18]
  • தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) [19] [20]
  • அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) [21]

[தொகு] ஆதாரங்கள்

  1. ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்.
  2. Cricinfo, ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்
  3. [1]
  4. [2]
  5. http://content-usa.cricinfo.com/srilanka/content/current/player/49636.html
  6. [3]
  7. [4]
  8. [5]
  9. [6]
  10. [7]
  11. [8]
  12. [9]
  13. [10]
  14. [11]
  15. [12]
  16. [13]
  17. Tests - Fastest to 700 Career Wickets
  18. [14]
  19. [15]
  20. Lynch, Steven (2005-07-11). Most ODIs before a Test, and double figures all in a row. Cricinfo. இணைப்பு 2007-01-04 அன்று அணுகப்பட்டது.
  21. [16]

[தொகு] வெளி இணைப்புகள்


பா    தொ
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணி {{{படிம தலைப்பு}}}
ஜயவர்தன | அத்தப்பத்து | ஜயசூரிய | தரங்க | சங்கக்கார | டில்ஷான் | ஆர்னோல்ட் | சில்வா | மவுரூவ் | வாஸ் | பர்னான்டோ | மாலிங்க | குலசேகர | முரளிதரன் | பண்டார | பயிற்றுனர் மூடி
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com