தொழிற்புரட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொழிற்புரட்சி (Industrial Revolution) என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் ஏற்பட்ட தொழில்நுட்ப, பொருளாதார, கலாச்சார மாற்றங்களைக் குறிக்கும். இது முதலில் இங்கிலாந்தில் தொன்றிப் பின் உலகெங்கும் பரவியது.
தொழிலாளர்களைச் சார்ந்திருந்த பொருளாதாரமானது இயந்திரங்களைச் சார்ந்ததாக மாறியது. நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்பு இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். நீராவி ஆற்றல் முதலில் நெசவு இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்டது. பின் இரும்பு தயாரித்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தப் பட்டது. இயந்திரமயமாக்கலால் உற்பத்தி வெகுவாகப் பெருகியது.