Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஒரியா மொழி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஒரியா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஒரியா
 நாடுகள்: இந்தியா 
பகுதி: ஒரிசா
 பேசுபவர்கள்: 31 மில்லியன் (1996) 
நிலை: 32
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இந்திய-ஈரானியம்
  இந்திய-ஆரியம்
   கிழக்கு இந்திய-ஆரியம்
    ஒரியா மொழிகள்
     ஒரியா 
எழுத்து முறை: ஒரியா எழுத்து 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இந்தியா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்:
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: or
ISO 639-2: ori
ISO/FDIS 639-3: ori 

ஒரியா மொழி இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இம் மொழி பேசுவோர் ஒரிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான மேற்கு வங்காள மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாரைக்கேலா கார்சாவான் மாவட்டத்திலும், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரம் மாநகரசபைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரிசாவிலிருந்து பெருமளவு தொழிலாளர்களின் இடப்பெயர்வு காரணமாக இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான குஜராத்திலும் ஒரியர்கள் வாழுகிறார்கள். இம் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒரியா பேசும் நகரமாகக் கருதப்படுகிறது. ஒரியா, இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்று ஆகும். இம் மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் பிரிவின், இந்திய-ஆரிய மொழிகள் குழுவைச் சேர்ந்தது.

இம் மொழி, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டுவந்த, பூர்வ மகதி என்னும் பிராகிருத மொழியின் நேரடி வழித்தோன்றல் எனக் கருதப்படுகின்றது. ஒரியா, தற்கால மொழிகளான வங்காள மொழி, மைதிலி மொழி, அசாமிய மொழி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகக் குறைவான பாரசீக மொழித் தாக்கத்துக்கு உட்பட்டது எனலாம்.

[தொகு] ஒரிய இலக்கியம்

ஒரியா மொழிக்கு சுமார் 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நல்ல வளமான இலக்கிய வரலாறு உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சரள தாசர் மகாபாரதத்தை ஒரியாவில் மொழி பெயர்த்தார். இதனால் இவர் ஒரிசாவின் வியாசர் என்று போற்றப்படுகிறார். உண்மையில், சமஸ்கிருத நூல்களான மகாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றை மொழிபெயர்த்ததின் மூலமே ஒரிய மொழி பொதுமைப் படுத்தப்பட்டது. ஜகனாத தாஸ் என்பவர் பாகவதத்தை ஒரியாவில் மொழிபெயர்த்தார், இதுவே ஒரியாவின் எழுத்து மொழியைப் பொதுமைப்படுத்த உதவியது. ஒரியாவுக்கு, சிறப்பாகப் பக்தி அடிப்படையிலான வலுவான கவிதை மரபும் உண்டு.

இம் மொழியில் உரைநடை ஒரு பிற்கால வளர்ச்சியாகும். பக்கீர் மோகன் சேனாபதி, மனோஜ் தாஸ், பிபுத்தி பட்நாயக், பிரதிபா ராய், சுரேந்திர மொகந்தி, மதுசூதன் தாஸ், கிஷோரி சரண் தாஸ், காலினி சரண் பாணிக்கிரகி, ஹரி ஹர தாஸ், கோபிநாத் மொகந்தி என்போர் குறிப்பிடத்தக்க உரைநடை எழுத்தாளர்கள் ஆவர். எனினும் உரைநடையை விடக் கவிதையே தற்கால ஒரிய இலக்கியத்தின் பலமாக விளங்குகிறது. ஒரியக் கவிஞர்களான சச்சிதானந்த ரௌத்ரே, குருப்பிரசாத் மொகந்தி, சௌபாக்ய மிஸ்ரா, ராமகாந்த ராத், சிதாகாந்த மொகபத்ரா என்போர் இந்தியக் கவிதைத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர்.

[தொகு] வரலாறு

ஒரிய மொழி வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாகப் பிரிப்பது வழக்கம். இவை:

  • பழைய ஒரியா - (10 ஆம் நூற்றாண்டு - 1300)
  • முந்திய இடைக்கால ஒரியா - (1300 - 1500)
  • இடைக் கால ஒரியா - (1500 - 1700)
  • பிந்திய இடைக்கால ஒரியா - (1700 -1850)
  • தற்கால ஒரியா (1850 முதல் இப்பொழுது வரை)

[தொகு] ஒலியன்கள்

ஒரியா 28 மெய் ஒலியன்களையும், 6 உயிர் ஒலியன்களையும் கொண்டது.

உயிர்கள்
  முன் பின்
மேல் i u
இடை e o
கீழ் a ɔ
மெய்கள்
  இதழ் பல் நுனி அண்ணம் வளைநா இடை அண்ணம் பின் அண்ணம் குரல்வளை
ஒலிப்பிலா வெடிப்பொலிகள் p

t̪ʰ
  ʈ
ʈʰ
ʧ
ʧʰ
k
 
ஒலிப்புடை வெடிப்பொலிகள் b

d̪ʰ
  ɖ
ɖʰ
ʤ
ʤʰ
ɡ
ɡʰ
 
ஒலிப்பிலா உரசொலிகள்     s       h
மூக்கொலிகள் m   n ɳ      
இடையொலிகள்     l, r ɭ      
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com