See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மிருகசீரிடம் (நட்சத்திரம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மிருகசீரிடம் (நட்சத்திரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மிருகசீரிடம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். ஏறக்குறைய ஜனவரி 10 தேதிகளில் 22 மணியளவிலும் மூன்று மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இதைக் காணலாம். இதனுடைய அறிவியற்பெயர் λOrionis. தற்கால வானியல் படி இது Orion என்ற விண்மீன் குழுவில் கணக்கிடப்படுகிறது. இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது இடபராசியில் கணக்கிடப்படுகிறது.

[தொகு] இரவில் மணி அறிதல்

இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் மிருகசீரிடம் குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

மான்றலை மூன்றும் தேங்காய்க் கண் போல்

ஆன்ற சிங்கத்தைந்தே காலே

மிருகசீர்ஷம் என்ற வடமொழிச்சொல்லை தமிழில் மான்றலை என்று மொழிபெயர்த்திருப்பது இப்பாட்டின் சிறப்புகளில் ஒன்று. வானத்தில் மிருகசீரிடத்தோடு சேர்ந்த மூன்று நட்சத்திரங்களையும் பார்ப்பவர்கள் அந்த நட்சத்திரங்களை தேங்காயின் மூன்று கண்களாகச் சித்தரித்திருப்பது எவ்வளவு பொருத்தமானது என்று தெரிந்துகொள்வார்கள். மிருகசீரிடம் உச்சவட்டத்தில் வரும்போது சிங்கராசி உதித்து 5 1/4 நாழிகை ஆகியிருக்கும் என்பது பாட்டின் இரண்டாவது அடியின் பொருள். (1 நாழிகை = 24 நிமிடங்கள்).

மார்கழி 15ம் நாள் மிருகசீரிடத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். அந்த நாள் சூரியன் தனுசு ராசியின் மையத்தில் இருக்கும் நாள். அதனால் நாம் மிருகசீரிடத்தை உச்சத்தில் பார்க்கும்போது, கீழ்த்தொடுவனத்திற்கும் சூரியனுக்கும் இடச்சுழியாக இருக்கும் நேரத்தை இப்படி கணக்கிடலாம்: கன்னி 4 3/4; துலாம் 5; விருச்சிகம் 5 தனுசு 2 1/2. ஆக மொத்தம் 17 1/4 நாழிகைகள். அதாவது 6 மணி 54 நிமிடங்கள். ஆதலால் நேரம் ஏறக்குறைய 11-06 P.M. இதே முறையில் மற்ற நாட்களிலும் கணக்கிட்டுக் கொள்ளலாம். கீழுள்ள அட்டவணையில் மாதிரிக்காக சில நாட்கள் காட்டப்பட்டிருக்கின்றன.

மிருகசீரிடத்தை உச்ச வட்டத்தில்

பார்க்கும் இரவு

சூரியன் இராசிச்சக்கரத்தில்

இருக்கும் இடம்

வாய்பாட்டிலிருந்து

கணிக்கப்பட்ட நேரம் (ஏறக்குறைய)

புரட்டாசி 15 கன்னிராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

5-06 A.M.
ஐப்பசி15 துலா ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

3-06 A.M.
கார்த்திகை 15 விருச்சிக ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

1-06 A.M.
மார்கழி 15 தனுசு ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

11-06 P.M.
தை 15 மகர ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

9-06 P.M.
மாசி 15 கும்ப ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

7-06 P.M.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] துணை நூல்கள்

  • Robin Kerrod. The Star Guide.1993. Prentice Hall General Reference. New York. ISBN 0-671-87467-5
  • V.Krishnamurthy. The Clock of the Night Sky.1998. UBS Publishers. New Delhi
  • V. Krishnamurthy. Culture, Excitement & Relevance of Mathematics.1990. Wiley Eastern Limited. New Delhi. ISBN 81-224-0272-0


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -