See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மானிடவியல் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மானிடவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மானிடவியல் (Anthropology) மனித இனம் பற்றிய கல்வித்துறை ஆகும். "இது மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும், உயிரியல் நிலையிலும், கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது." [1]


இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.

ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:

  • உடல்சார் மானிடவியல், இது உயர்பாலூட்டி நடத்தைகள், மனித படிமலர்ச்சியியல் (evolution), குடித்தொகை மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது.
  • பண்பாட்டு மானிடவியல், (சமூக மானிடவியல் அல்லது சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும்). பண்பாட்டு மானிடவியலாளரின் ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்;
  • மொழிசார் மானிடவியல், இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழி பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது;
  • தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆரய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).


பொருளடக்கம்

[தொகு] வரலாறு மற்றும் நிறுவனம் சார்ந்தவை

[தொகு] மானிடவியல் எண்ணக்கருக்கள்

[தொகு] மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும்

  • உயிரியல் மானிடவியல் (அத்துடன்பௌதீக மானிடவியல்)
    • சட்ட மானிடவியல்
    • Paleoethnobotany
  • பண்பாட்டு மானிடவியல் (சமூக மானிடவியல் எனவும் கூறலாம்)
    • பயன்பாட்டு மானிடவியல்
    • பண்பாட்டிடை ஆய்வு
    • இணையவெளி மானிடவியல்
    • அபிவிருத்தி மானிடவியல்
    • சூழல் மானிடவியல்
    • பொருளாதார மானிடவியல்
    • பழங்கால இசையியல்
    • மருத்துவ மானிடவியல்
    • உளவியல் மானிடவியல்
    • அரசியல் மானிடவியல்
    • சமய மானிடவியல் (Anthropology of religion)
    • புறப்பொருள் மானிடவியல் (Public)
    • காட்சி மானிடவியல்
    • இனவரைவியல்
  • மொழியியல்சார் மானிடவியல்
    • விளக்கமுறை மொழியியல் (Synchronic linguistics) அல்லது விளக்க மொழியியல் (Descriptive linguistics)
    • வரலாற்றுமுறை மொழியியல் (Diachronic linguistics) அல்லது வரலாற்று மொழியியல் (Historical linguistics)
    • இனக்குழு மொழியியல் (Ethnolinguistics)
    • சமூகமொழியியல்

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -