பருவப் பெயர்ச்சிக் காற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பருவப் பெயர்ச்சிக் காற்று என்பது, பருவகால அடிப்படையில் திசைமாறி வீசுகின்ற காற்று முறைமையைக் குறிக்கும். ஆரம்பத்தில் இது, அரபிக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பகுதிகளில் வீசும் காற்றுகளைக் குறிக்கவே பயன்பட்டது. இந்தியாவுக்குத் தென்மேற்குப் பகுதியிலிருந்து வீசும்காற்று, தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று என்றும், வங்காள விரிகுடாப் பகுதியிலிருந்து வீசும் காற்று, வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று என்றும் குறிப்பிடப்படுகின்றது. இப்பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு மழையைக் கொண்டு வருகின்றன. சில பகுதிகள் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களின்போதும் மழையைப் பெற, தமிழ் நாட்டின் பல பகுதிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகள் ஒரு பருவத்தில் மட்டுமே மழையைப் பெறுகின்றன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இந்தியாவின் காலநிலை
- இலங்கையின் காலநிலை