உளவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உளவியல் (Psychology) சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியல்களுள்ளும் அடங்குகின்றது. 1879 இல் Wilhelm Wundt ஜேர்மனியிலுள்ள Leipzig பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுகூடத்தை நிறுவினார். இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப்படுகிறது.