ஃபயர் ஃபாக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொஸிலா பயர்பாக்ஸ் | |
மொஸிலா உலாவியில் தமிழ் விக்கிபீடியா முதற்பக்கம். |
|
பராமரிப்பாளர்: | மொஸிலா காப்ரேஷன் / மொஸிலா பவுண்டேசன் |
மென்பொருள் வெளியீடு: | 2.0.0.11 (2 டிசம்பர், 2007) [+/-] |
மேலோட்ட வெளியீடு: | 3.0b1 (டிசம்பர் 2, 2007) [+/-] |
இயங்குதளம்: | பல் இயங்குதளம் |
கிடைக்கும் மொழி(கள்): | பன் மொழி |
பயன்: | இணைய உலாவி |
License: | Mozilla EULA for binary redistribution |
இணையத்தளம்: | பயர்பாக்ஸ் |
மொஸிலா பயர்பாக்ஸ் உலாவி இலவச திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும்.. இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும்.
பயர்பாக்ஸ் பொப்பகளைத் தடுத்தல் (pop up blocker) தடுக்தல், தத்தல் முறையிலான இணைய உலாவல், திறந்த நியமமுறையூடாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்நிலைப்புத்தககுறிப்பு (live Book mark), திற்ந்த நியமங்களை ஆதரித்தல் மற்றும் இடைமுகங்களை வேண்டியவாறு மாற்றுதல் போன்றவை. பயர்பாக்ஸ் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான சபாரி இணைய உலாவிகளை ஓர் மாற்று உலாவியாக விளங்குகின்றது.
செப்டம்பர் 2006 கணக்கெடுப்பின்படி பயர்பாக்ஸ் உலாவியானது 12% உலகளாவிய ரீதியான பாவனையையும் ஜேர்மனியில் மிகக்கூடுதலான பாவனையாளர்களுடன் 39% வீதத்துடன் விளங்குகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
ஆரம்பத்தில் பயர்பாக்ஸ் ஓர் சோதனைப் பதிப்பாகவே அறிமுகப் படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் ஃபீனிக்ஸ் (ஃவீனிக்ஸ், Phoenix) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது பெப்ரவரி 9, 2004 இல் இருந்து மொஸிலா பயர்பாக்ஸ் அல்லது சுருக்கமாக பயர்பாக்ஸ் என மாற்றப்பட்டது. பயர்பாக்ஸ் 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே பயர்பாக்ஸ் உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான பயர்பாக்ஸ் 2.0 ஐ வெளியிட முன்னர் பயர்பாக்ஸ் 1.0 நவம்பர் 9, 2004 உம், பயர்பாக்ஸ் 1.5 நவம்பர் 29, 2004 இலும் வெளியிடப்பட்டது.
[தொகு] தற்போதைய பதிப்பு
பயர்பாக்ஸின் இரண்டாவது பதிப்பு பசிபிக் நேரப்படி அக்டோபர் 24 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்னரே பீட்டாநியூஸ் இணையத்தளமூடாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.
பொன் எக்கோ (Bon Echo) எனச் செல்லப் பெயரிடப்பட்ட இத் திட்டமானது இதம் முதலாவது பீட்டாப் பதிப்பில் இருந்து அதிகாரப் பூர்வமாக பயர்பாக்ஸ் 2.0 என்றே அறியப்பட்டது.
இதிலுள்ள வசதிகள்
- புதிய விண்டோஸ் நிறுவலானது நள்சாப்ட்டின் (Nullsoft) ஸ்கிரிப்ட் முறையிலானது.
- இணைய மோசடிகளைத் தடுக்கும் முறைகள்
- ஓளிந்திருக்கும் பலதேர்வுகள் எவ்வாறு தத்தல் முறையிலான உலாவல்கள் தோற்றமளிக்கும் முறைகள்.
- தத்தல் முறையில் மூடப்பட்டவற்றின் சரித்திரங்களும் அவற்றை மீளத்திற்க்கும் முறையும்.
- உலாவியானது நிலைகுலைந்து மீள ஆரம்பித்தால் விட்ட இடத்திலிருந்து தொடரும் வசதி.
- புதிய தீம்கள், புதிய ஐக்கான்கள், மற்றும் புதிய தத்தல் முறையிலான
- எழுத்துப் பிழைகளைச் சிகப்புக் கோடிட்டுக் காட்டுதல் இப்பதிப்பில் அறிமுகம் செய்யப்படுகின்றது அத்துடன் மாற்றுப் பெருமாபலும் சரியான சொல்லையும் தருகின்றது.
- தேடல் ஆலோசனைகள் தானகவே சொற்களை முழுமையாக்கும் வசதி, யாகூ! தேடல், கூகிள் தேடல் மற்றும் ஆன்ஸ்சில் கிடைக்கின்றது.
- புதிய தேடற் சேவையானது திறந்த தேடல்கள் மற்றும் ஷெர்லாக் தேடல்களை ஆதரிக்கின்றது.
- நீட்சிகள், தீம்கள் போன்றவற்றைக் கையாள்வதற்கான சேர்க்கைகள் மனேஜர் என்ற வசதி.
- புதிய தேடற்பொறிப் பொருத்தானது தேடுபொறிகளை அகற்றுவதற்கும் மீளஒழுங்கமைப்பதற்கும் பயன்படுகின்றது.
- RSS மற்றும் Atom ஊட்டுக்களைப் பெறும் வசதியானது மேம்படுத்தப்பட்டுள்ளது.
- ஜாவாஸ்கிரிப்ட் 1.7 இன் முழுஆதரவும் 1.6 இன் ஆதரவும்.
[தொகு] வரவிருக்கும் மாற்றங்கள்
[தொகு] 3ஆவது பதிப்பு
கண்டிவெடிப்பிரதேசம் என்றப்பொருள்படும் மைன்ஸ்பீட்" என்று செல்லப்பெயரால் அறியப்படும் இதன் மூன்றாவது பதிப்பானது விண்டோஸ் 95, 98 மற்றும் மில்லேனியம் மற்றும் NT ஆகிய இயங்குதளங்க்ளை ஆதரிக்காது.
[தொகு] வசதிகள்
பயர்பாக்ஸ் உலாவியானது பயனர்களால் உருவாக்கப் பட்ட நீட்சிகள் மற்றும் பொருத்துக்களை நிறுவிப்பாவிக்கூடியது. பயர்பாக்ஸ் உலாவியானது பிரதான வசதிகளான தத்தல் முறையில் உலாவுதல், தேடல் வசதிகள், நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு, பதிவிறக்கங்களை விரும்பியவாறு ஒழுங்கமைக்கக்கூடிய வசதி போன்றவற்றினால பெரிதும் விரும்பப் படுகின்றது.
பயர்பாக்ஸ் பல மென்பொருள் நியமங்களை ஆதரிக்கின்றது. இதில் HTML, XML, xHTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட், DOM, MathML, DTD, XSL, XVG, XPath மற்றும் PNG முறையிலான படக்கோப்புக்களை ஆதரிக்கின்றது.
மொஸிலா பயர்பாக்ஸ் ஓர் பல் இயங்குதள உலாவியாகும் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் விண்டோஸ் 98, 98 இரண்டாம் பதிப்பு, மில்லேனியம், NT, 2000, XP மற்றும் சேவர் 2003 இயங்குவதோடு, ஆப்பிள் மாக் ஓஸ் X மற்றும் லினக்ஸ் எக்ஸ்விண்டோ முறையில் இயங்கும். இதன் இலவசமான திறந்த மூலநிரலைக் கொண்டு FreeBSD, OS/2, சொலாரிஸ், ஸ்கைஓஎஸ் (SkyOS), பீஈஓஎஸ் (BeOS) மற்றும் விண்டோஸ் XP 64 பிட் பதிப்பிலும் இயங்கும்.
இணையவிருத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்குகின்றது. இதில் ஜாவாஸ்கிரிப்ட் கன்சோல், DOM ஐ மேற்பார்வையிடுதல் மற்றும் வெங்காமான் ஸ்கிரிப்ட் டீபகர் ஆகியவற்றை வழங்குகின்றது.
[தொகு] பன்மொழி ஆதரவு
பயர்பாக்ஸ் உலாவியானது பல மொழிகளில் கிடைக்கின்றது. தமிழ் பயர்பாக்ஸ் முயற்சிகள் தமிழா இணையத்தளமூடாக ஆரம்பிக்கப்பட்டு அதன் 1.5.0.1 பதிப்பானது தமிழ் மொழியில் உள்ளீடு செய்யக் கூடிய வகையில் கிடைக்கின்றது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- செல் பயர்பாக்ஸ் - செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய பயர்பாக்ஸ்
- தமிழ் விசை நீட்சி
[தொகு] சந்தை நிலவரம்
ஐரோப்பாவில் 20% மானவர்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பயன்படுத்துவதாகத் தெரிகின்றது.
[தொகு] வெளியிணைப்புக்கள்