பேச்சு:விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
there are some spelling mistakes & grammer mistakes in this article கோபி 11:37, 4 ஏப்ரல் 2006 (UTC)
- கோபி, Thanks for notifying the mistakes both grammatical and spelling. I have gone through the article. If still there are any mistakes feel free to correct it. You are always welcome. Thanks for your active contribution for Tamil wikipedia.--உமாபதி 12:10, 4 ஏப்ரல் 2006 (UTC)
10000 கட்டுரைகளுக்கான ஒரு இலக்கு திகதி பொதுவாக அறிவிக்கப்படவில்லை என்றே நினைக்கின்றேன். 2007 இறுதி அல்லது 2008 தொடக்கம் கூட, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி வேகத்தில்தான் தங்கியிருக்கின்றது. --Natkeeran 12:38, 4 ஏப்ரல் 2006 (UTC)
- 10, 000 கட்டுரை இலக்கை விரைவில் அடைவதுதான் தமிழிற்கும் நல்லது விக்கிப்பீடியாவிற்கும் நல்லது. இது தவறுதலாகச் சேர்க்கப் பட்டுவிட்டது என்றும் நினைக்கின்றேன். சில விக்கிப்பீடியாக்கள் பயனர்களைக்க் கூட்டுமுகமாக ஜிமெயில் மின்னஞ்சல்களை வழங்குவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இதே யுக்தியை நாமும் கையாளலாமா?. என்னிடம் மேலதிகமான ஜிமெயில் மின்னஞ்சல் அழைப்புக்கள் உள்ளன. 10, 000 கட்டுரை இலக்கை அடைவதற்கு முக்கியமாகப் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.--உமாபதி 12:58, 4 ஏப்ரல் 2006 (UTC)
-
- தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தன்னார்வம் உள்ள பயனர்களை அணுக வேண்டுது நன்றே. ஆனால், பிற எந்த பயன்களையும் காட்டி அல்லது அளித்து பயனர்களை ஈர்ப்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஒர் உண்மையான ஆர்வம் உள்ள பயனர், பல பத்து குறிக்கோள் தடுமாறிய பயனர்களை விட மேலே.
-
- எனினும், நீங்கள் சுட்டியபடி விக்கிப்பீடியாவை பரந்த முறையில் அறிமுகப்படுத்தல் நன்றே. தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் கூடும் இடங்களுக்கு சென்று அறிமுகப்படுத்தல் ஒரு வழிமுறை. இங்கு இருக்கும் பயனர்கள் அனைவருக்கும் அப்படி நேரம் செலவிடுவது சற்று கடினம் போலவே தெரிகின்றது.
-
- வலைப்பதிவர்களே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இலகுவில் பங்களிக்க கூடியவர்களாக இருப்பார்கள். பலரை பங்களிக்க கேட்டதில், அனேகர் பங்களிக்க ஆர்வமாகவே இருப்பது தெரிகின்றது. சிறிது சிறிதாக அவர்களின் பங்களிப்பை எதிர்பாக்கலாம். சிலருக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுப்பது, மற்றும் விக்கிப்பீடியாவின் நடை ஆகியவை தயக்கத்தை தரும் காரணிகளாக இருக்கின்றன. --Natkeeran 15:17, 4 ஏப்ரல் 2006 (UTC)
எனக்கும் வேறு பயன்களைக் காட்டிப் பயனர்களைக் கவர்ந்திழுக்கும் உத்தியில் நம்பிக்கையில்லை. உண்மையான ஆர்வத்துடன் வருபவர்கள்தான் நின்று நிலைப்பார்கள். ஆரம்பத்தில் நிதானமான வளர்ச்சியும் ஓரளவுக்கு நல்லதுதான். இருக்கும் பங்களிப்பாளர்கள் தங்களை விக்கிப்பீடியாவுக்கு நன்கு பழக்கப்படுத்திக்கொள்ள இது வசதியாக இருக்கும். பதினைந்து தொடக்கம் 20 வரையான விக்கிப்பீடியா அனுபவம் உள்ள பயனர்கள் களத்தில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் வேகமான வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் ஏற்படும்போது கட்டுப்பாடில்லாமல் போகக்கூடிய நிலையைத் தடுக்கலாம். முதலில் தெரிந்த, ஆர்வமுள்ளவர்களை உள்ளே கொண்டுவர முயலலாம். இப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாப் பட்டியலில் 10 நிர்வாகிகள் இருந்தாலும் இவர்களிற் பலரை அண்மைக் காலங்களில் காண முடியவில்லை. ஓரிருவரை வருடக்கணக்காகவே காணமுடியவில்லை.
10,000 கட்டுரைகள் இலக்கை அடையக் காலம் குறிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. தனிப்பட்ட பங்களிப்பாளர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தரமான கட்டுரைகளை எழுதும்போது இலக்குத் தானாகவே நம்மை நோக்கி வரும். புதிய கட்டுரைகளைப் பற்றிச் சிந்திக்கும் அதே வேளை ஏற்கெனவே இருக்கும் பல குறுங்கட்டுரைகள், தமிழாக்கம் செய்யப்படவேண்டிய கட்டுரைகள் என இருப்பவற்றின் தரத்தையும் அதிகரிக்க முயலவேண்டும். விக்கிப்பீடியாவின் கட்டுரைகளிலிருந்து பயன்பெற வருபவர்களைப் பொறுத்தவரை கட்டுரைகளின் உள்ளடக்கமும் அவற்றின் தரமும் மிகவும் முக்கியம். இப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாள 2500 கட்டுரைகள்வரை இருப்பதால் கூகிள் போன்றவற்றில் தமிழில் எந்தச் சொல்லைப் போட்டுத் தேடினாலும் தமிழ் விக்கிப்பீடியாவும் பட்டியலில் வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலையிலிருந்து நாங்கள் அதிகூடிய பலனைப் பெறவேண்டுமானால் இங்கே இடம்பெறும் கட்டுரைகள் எல்லாவற்றையும் தரமுள்ளவையாக ஆக்க முயலவேண்டும். இதன்மூலம் தரமான பல பங்களிப்பாளர்களை விக்கிப்பீடியா பக்கம் கவரமுடியும்.
தமிழ் விக்கிப்பீடியாவின் நடை பலருக்குத் தயக்கத்தைத் தருவதாக நற்கீரன் குறிப்பிட்டுள்ளார். சிலர் இவ்வாறு கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு சாட்டாகவே இருக்கமுடியும். எழுதுபவர்தான் இங்கே நடையை உருவாக்குகிறார். இப்பொழுது இருக்கும் நடையில் குறைகள் இருப்பின், சரியான நடையில் எழுதத் தெரிந்தவர்கள் பங்களிப்பதன் மூலம் தான் இக் குறை நிவிர்த்தியாகும். அவர்களின் நடை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும். Mayooranathan 19:05, 4 ஏப்ரல் 2006 (UTC)
- Mayooranathan, Natkeeran அவர்களின் கருத்திற்கமைய விக்கிப்பீடியா கட்டுரைகளில் சிலமாற்றங்கள் செய்துள்ளேன். நான் இணைய உரையாடல்கள் மற்றும் வலைப் பதிப்புகளில் ஈடுபடுபவர்களைத் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அழைக்க முயற்ச்சித்துப் பார்க்கின்றேன்.--உமாபதி 04:27, 5 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] விக்கிப்பீடியா - திருத்தி எழுதுதல்
விக்கிப்பீடியா (http://www.wikipedia.org/) உலகளாவிய ரீதியில் தன்னார்வலர்களால் விடுதலை மனப்பாங்குடன் உருவாக்கப்படும் ஒர் இணைய பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகும். விக்கி என்று சொல்லும் encyclopedia என்ற சொல்லில் வரும் பீடியா என்ற சொல்லும் சேர்த்து விக்கிப்பீடியா என்ற சொல் உருவாக்கப்பட்டது. விக்கி விரைவு என்பதைக் குறிக்கும் ஹவாய் மொழிச் சொல். விரைவாக இணையத்தில் தொகுக்க கூடிய தொழில்நுட்பத்தை இப்பொழுது விக்கி குறிக்கின்றது. பீடியா என்பது 'அறிவுக் கோர்ப்புக் காப்பகம்' என பொருள் தரவல்லது. விக்கிப்பீடியா என்பது விரைவாக தொகுக்க கூடிய அறிவு அல்லது கலைக் களஞ்சியம் என்று பொருள்படுகின்றது.
விக்கிப்பீடியா திட்டம் ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணைய தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தி தொகுக்ககூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.
அனைத்து மனித அறிவும் கட்டற்ற முறையில் மொழிகளை கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத் திட்டம் இலாப நோக்கமற்றது, பக்க சார்பற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும் கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 3,700,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 1.5 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 இற்கு மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மொழிகள் 50, 000 கட்டுரைய எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா பல சகோதரத் திடங்களையும் நடைமுறைப் படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
[தொகு] மேம்படுத்தப் பட வேண்டிய பகுதிகள்
[தொகு] எழுதுதல்
விக்கிப்பீடியாவிற்கு வரும் எவருமே விக்கிப்பீடியாவை எழுதலாம். பதிவு செய்யப் பட்ட பயனர்களின் மாற்றங்கள் உடனடியாகவே காட்டப்படும். விக்கிப்பீடியாவின் எதிர்பார்பானது கூட்டுறவே நாட்டுளவு என்றதைப் போன்ற திறந்த மூலநிரல் போன்று எல்லாரினதும் பங்களிப்பை எதிர்பார்க்கும் கலைக்களஞ்சியம் ஆகும்.