நண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நண்டு | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Callinectes sapidus
|
||||||||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
Superfamilies | ||||||||||||||
|
நண்டு உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும். நன்னீர் நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில மில்லிமீற்றர் (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு மீற்றர் (m) வரை வளரும் யப்பானியச் (Japanese) சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன. பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.
நண்டு மிகவும் பிரபலமான கடலுணவு ஆகும். கடலுணவுகளில் 20% நண்டுகளே. ஆண்டுதோறும் ஒன்றரை மில்லியன் தொன்னுக்கும் (Ton) அதிகமான நண்டுகள் உணவாகின்றன.
[தொகு] நண்டு வகைகள்
- குளுவான் நண்டு
- நீலக்கால் நண்டு